Articles,  Microsoft,  தமிழ்

Windows 11 and Tamil

முகமது-பின்-துக்ளக் சினிமாவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுல்தான் துக்ளக்காக வரும் சோ, அழகாகத் தமிழ் பேசுவார். திடுக்கிட்டு, “உங்களுக்கு எப்படித் தமிழ் தெரியும்..?” என்று கேட்டால், “என் காலத்திலேயே நான் ஓர் தமிழ் மேதாவி என எல்லோருக்கும் தெரியும்” என்று கிண்டலாகச் சொல்லுவார். அதுபோல, மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்கு தளத்தில் தமிழ் தோன்றவும், தமிழில் எழுதவும், தமிழைப் புரிந்து கொள்ளவும் முடியும் என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். உண்மையில் இருப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அதாவது விண்டோஸ் 2000லேயே தமிழ் வசதி வரத் தொடங்கிவிட்டது.

விண்டோஸ் 11-ல் இருக்கும் தமிழுக்கான புதி வசதிகளை இங்கே பார்க்கலாம். இவற்றைக் கொண்டு, ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்களும்கூடக் கணினியை எளிதாகப் பயன்படுத்தலாம்.
1. தமிழ் காட்சி மொழி
2. தமிழில் எழுதுங்கள் – விசைப்பலகை
3. தமிழில் பேசு
4. தமிழ் பிழை திருத்தி

இன்றைய மெட்ராஸ் பேப்பர் இதழில் என் கட்டுரையின் தொடக்க பத்திகள் மற்றும் பகுதிகளின் தலைப்புகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.