இன்றைய (13 ஜூலை 2022) மெட்ராஸ் பேப்பர் இதழில் “செல்போனுக்குக் கல்யாணம் செய்து வைப்பது எப்படி?” என்கிற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்திருக்கிறது. இந்தத் தொடரை  எழுத எனக்கு வாய்ப்பளித்து, எழுதியதை மெழுக்கேற்றிய நண்பர், பிரபல எழுத்தாளர் திரு பா ராகவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்கள் கட்டுரையைப் படித்து விட்டு தங்களது கருத்துக்களைப் பகிரவும். நன்றி.

முழுக் கட்டுரையும், இதழில் உள்ள மற்ற பல நல்ல கட்டுரைகளையும் படிக்க சந்தா தேவை, தமிழ் பத்திரிகை உலகில் தரமான எழுத்தியல் வளர உங்கள் சந்தாவும், ஆதரவும் பயனாகவிருக்கும்.

முதல் சில பத்திகள் கீழே:

செல்லற்ற நல்லோர் என்று அநேகமாக இன்றைக்கு உலகில் யாருமில்லை. செல்போன் ஓர் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. அதுவும் குறுந்தொழில் – சிறுதொழில் செய்பவர்களுக்கு அதுதான் அலுவலகமே. பல்போன தாத்தா, பாட்டிகளுக்கும் செல் அவசியம். அதுதான் வெளிநாட்டில் இருக்கும் அவர்களின் பேரன், பேத்திகளோடு பேசி, விளையாட உதவும் மந்திரக் கருவி. அப்படிப்பட்ட முக்கியக் கருவிக்குக் கையேடுகள் எதுவும் வருவதில்லை, பள்ளி கல்லூரிகளில் அதைப் பற்றி கற்றுத் தருவதுமில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டுவிடுவதன் விளைவு.

இப்போதுதான் முதன் முதலாக ஒரு திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வாங்கியிருக்கிறீர்கள் என்றால் இன்னும் மோசம். தெரியாமல் அதில் எதையாவது அழுத்திவிட்டால் கெட்டுப் போய்விடுமோ என்ற பயம் வேறு பாடாய்ப் படுத்தும். நமது பிள்ளைகளிடம் குரு தட்சிணை கொடுத்துக் கற்கலாம். பொதுவாக அதை யாரும் செய்வதில்லை. இளைய தலைமுறையும் பெற்றோருக்கு இதனை நாம்தான் கற்றுத்தர வேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்களுக்குப் பொறுமைப் பற்றாக்குறை. என்ன செய்ய?

வாங்கியது சரியாக இருக்கிறதா? திறந்ததும் முதலில் என்ன செய்ய வேண்டும்? எளிய விஷயம்தான். இருந்தாலும் எல்லோருக்கும் இது தெரிந்திருப்பது அவசியம்.

தொடர்ந்துப் படிக்க..

#madraspaper #smartphone

Categorized in:

Tagged in:

,