தமிழ்

Small rays of hope against COVID-19?

உலகயே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 (Coronavirus) வைரஸ் விஷயத்தில், இதுவரை நல்ல செய்திகள் இல்லை! இன்று தமிழ் இந்து திசையில் திரு கு.கணேசன், பொதுநல மருத்துவர் அவர்கள் எழுதியுள்ள இந்தக் கட்டுரை ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது.

எந்தொரு வைரஸ் தொற்றையும் (Chicken Pox-சின்னம்மை, Polio-இளம் பிள்ளை வாதம் போன்று) முறியடிக்க மனிதக்குலத்திடம் இப்போதைக்கு இருக்கும் பெரிய ஆயுதம், தடுப்பூசிகள் தான். கோவிட்-19க்கு இப்படியான ஒன்றைக் கண்டுப்பிடிக்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகும், அதற்குள் நமக்கு இந்தக் கொடிய நோயைக் கட்டுப்படுத்த மாற்று வழிமுறைகள் உடனடியாக தேவை. அப்படியான இரண்டு வழிகளை திரு கு.கணேசன் குறிப்பிட்டுள்ளார், அவை தான் கொஞ்சம் நிம்மதிக் கொடுக்கின்றன. அவர் சொல்லியுள்ள “புதிய” (பரிசோதனையில் இருக்கும் அவசரக்கால) முறைகள்:

//1) ‘கோவிட்-19’ காய்ச்சலிலிருந்து மீண்ட நோயாளிகளின் ரத்தத்தைப் பெற்று, அதிலிருந்து ‘பிளாஸ்மா’ என்னும் திரவத்தைப் பிரித்தெடுத்து, மோசமான கட்டத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புதிய நோயாளிகளுக்குச் செலுத்தினார்கள். இப்படிச் செலுத்தப்பட்ட பிளாஸ்மாவில் ‘கோவிட்-19’ கிருமிகளை முறியடிக்கும் நோயெதிர்ப்பொருட்கள் கோடிக்கணக்கில் இருந்த காரணத்தால், அந்த நோயாளிகள் ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டார்கள்.

2) தற்போது ‘ஃபேவிலாவிர்’ (Favilavir) மருந்தைக் கொடுத்தால் ‘கோவிட்-19’ காய்ச்சல் கட்டுப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது. //


On a different note:

Along with the (deadly) coronavirus global emergency to worry, we have a simpler infection at hand to prevent in Chennai (India).

Conjunctivitis aka Madras Eye infection is back. Last month I went through the suffering, along with a cousin sister (who was visiting from the USA) & my mom: who brought it first to our house this season!

Dr Vasumathy Vedantham, mentioned in this article in The Times of India is my cousin sister. She is a leading ophthalmologist in Tamil Nadu, and runs Radhatri Nethralaya hospital in T.Nagar. Proud of you my sis, you rock!

#PinkEye #COVID19 #Coronavirus

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.