//காஞ்சிபுரம் கோயிலில் வடகலை, தென்கலை பிரச்சினை. இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மீறினால் போலீஸில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தல்.

~ இந்து தமிழ் திசை – 28 பிப்ரவரி 2020//

இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும் போது அசிங்கமாகவும் இருக்கிறது, கோபமும் வருகிறது:
– ஒரு நல்ல பக்தனிடம் வேற்றுமைகள் இருக்கக்கூடாது,
– எப்போது இவர்களுக்கெல்லாம் வெளிச்சம் தெரியுமோ?,
– எத்தனை எத்தனை அவதாரங்கள் தேவையோ தெரியவில்லை?
என்று என்ன-என்னமோ தோன்றுகிறது.

மனம் அமைதியானதும், இவர்களை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். நிச்சயம் நடக்கும்!

Discloure: நான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன், வடகலை: பிராமணன்.

Update 2 March 2020:

மேலே சொல்லிய நீதிமன்ற உத்தரைத் தொடர்ந்து நேற்று இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள்-சிறிய நல்ல செய்தியிது, மகிழ்ச்சியளிக்கிறது. தொடர வேண்டி, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளைப் வேண்டுகிறேன்.

நீதிமன்ற உத்தரைத் தொடர்ந்து நேற்று இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள்

நீதிமன்ற உத்தரைத் தொடர்ந்து நேற்று ( 1 மார்ச் 2020) இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். நன்றி: இந்து தமிழ் திசை.

Categorized in:

Tagged in: