
Sujatha’s Meendum Juno
சுஜாதாவின் மீண்டும் ஜீனோ
பொதுவாக எனக்கு கதைப் புத்தகங்கள் நாவல்கள் படிக்கும் பழக்கமில்லை. அவ்வப்போழுது ஆனந்த விகடன், குமுதம் போன்றப் பத்திரிகைகளில் தொடர்களாக வந்தால் படித்ததுண்டு. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை நான் சில முறை அவரின் ஆரம்பக்கால தமிழ் இணையத்தள முயற்சிகளுக்காக சந்தித்திருந்தாலும், அவரின் நூல்களைப் தொடர்களாக தான் படித்துள்ளேன். அப்படி தான் அவரின் ‘என் இனிய இயந்திரா’ ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபோது அவ்வப்போது படித்ததாக நினைவு. அதன் தொடர்ச்சியான ‘மீண்டும் ஜீனோ’வைப் இதுவரைப் படித்ததில்லை.
சமீபத்தில் நண்பர் ஒருவர் புண்ணியத்தால் “மீண்டும் ஜீனோ”வை மின் புத்தகமாகப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் விமானத்தில் ஏறியச் சிறிது நேரத்தில் படிக்க அரம்பித்து ஹாங்க்-காங்க் சென்றடையும் நீண்டப் பயணம் முடிவதற்குள் நேரம் போவதே தெரியாமால் படித்து முடித்தேன். அவ்வளவு சுவாரஸ்யம். விஞ்ஞான சமுக-அறிவியல் அடிப்படையில் நடக்க முடியாத கதை, ஆனாலும் அருமையான கற்பனை, வளமான எளிமையான எழுத்து நடை.

