Tag

Arts

Browsing

ஏனோ தெரியவில்லை, முன்பு என்றைக்கும் இல்லாமல், போன மாதம் திடீர் எனக் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து, மூன்று கவிதைகளும் எழுதிவிட்டேன். எனது முதல் கவிதை(கள்) முயற்சி, கீழே: பொருள் புரியும்படி எழுதியிருக்கிறேனா? தங்கள் கருத்தைக் கீழே எழுதினால், மகிழ்வேன்; திருத்திக்கொள்ள(வும்) உதவும். நன்றி!

Being a Vaishnavaite, I have been to Tirumala Tirupati for many times to offer my prayers to God Sri Venkateswara there. Almost always I go there with my family – we would’ve pre-booked for a time for our darshan – it being Tirupati it would be crowded and we would’ve stood in the queue for at least a few hours, being tired, the majority decision will be to return to Chennai immediately after – this would leave me no time to see around the hills. A few times when I had the time it would be in the late evenings…

சமீபத்தில் காலமான “பத்ம ஸ்ரீ” திரு ந. முத்துசாமி நவீன தமிழ் நாடகங்களின் தந்தை எனக் கூறலாம். அவரின் “கூத்துப்பட்டறை” என்ற நாடக கலை அமைப்பு மிகப் பிரபலம். நடிகர் “விஜய் சேதுபதி” போல, இங்கே இருந்து வந்தவர்கள் பலர் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளனர். இதுவரை ஐயா ந. முத்துசாமி அவரின் நாடகங்களை நான் பார்த்ததில்லை. அந்த குறை இன்று தீர்ந்தது. 1968யில் ‘நடை’ என்ற இதழில் வெளிவந்த அவரின் முதல் நாடகமான “காலம் காலமாக”, அவரின் மாணவர்களால், இன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடப்பது தெரிந்து, போய் பார்த்தேன். அபாரம்! நாடகத்தின் கதை என்பது தற்கால வாழ்க்கை, சமூகத்தைப் பற்றிய ஒரு விதமான நையாண்டி. ஒரு மருத்துவமனை, அங்கே ஒரு நோயாளியை மோசமான நிலையில் இருவர் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவன் பணக்காரன் போல, இன்னொருவன் உள்ளூர் அரசியல்வாதிப் போல இருக்கிறான். இருவரும் இவர்களுக்கு முன் இங்கே வந்து போனவர்களை முட்டாள்கள் என்று ஏளனம் செய்கிறார்கள். இவர்களுக்கு பின்…

அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் 2019 நல்வாழ்த்துக்கள்தி.ந.ச.வெங்கடரங்கன் Artists are everywhere around us. A morning walk in the area around my house treated me to beautiful kolams (hand drawing on the floor by using rice flour & chalk) to celebrate Pongal (Harvest Festival of the Tamilians). The collages in total have kolams from over 50 houses. See the variety of design and imagination. Pot, Sugarcane and Peacocks are common themes. From 25 Houses. From another 25 houses. Notice in the last row, second picture, two farmers carrying Pongal pot on their head.

சில வருடங்கள் முன் வரை தமிழ்த்தாய் வாழ்த்து என்றால், நான் பள்ளியில் கற்ற மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ தான் என்று நினைத்திருந்தேன். மலேசியா தமிழ் இணைய மாநாடு ஒன்றில் வேறு ஒரு பாடலை ஒலிக்கச் செய்தார்கள், அப்போது தான் தெரிந்தது, வேறு பல கவிஞர்களின் பாடல்களும் தமிழ் தாயை வாழ்த்த இருக்கிறது என்று, அந்தந்த அரசால்/நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடல்களும் வேவ்வேறு என்று. தமிழ்நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து: ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ – காணொளியில் குரல்: T.M.S. விக்கீப்பீடியா சொல்கிறது புதுச்சேரியில் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!” என்ற பாடல் அங்கே தமிழ் தாய் வாழ்த்தென்று. – காணொளியில் குரல்: Nithyashree Mahadevan மலேசியாவில் வழக்கில் (பிரபலமாக) இருப்பது கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் “நிலைபெறநீ வாழியவே! ” பாடல். காணொளியில் குரல்: துருவன், பாபு லோகநாதன் ஶ்ரீலங்காவிலும், சிங்கப்பூரிலும் வழக்கில்…