இன்றைய மதிய உணவு, மினி மீல்ஸ்: சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், ஊறுகாய். அளவுச் சாப்பாடு என்றாலும் போதுமானதாகவே இருந்தது.
ஒரு காலத்தில் மேற்கு மாம்பலத்தில் இருக்கும் முருகன் இட்லிக்கடை என் விருப்பமான உணவகம். பல ஆண்டுகள் கழித்து இன்று சென்றேன்.
சேப்பியன் யு-ட்யூப் ஓடையின் பதிவுகளை முடித்துவிட்டு, குழுவாக இங்கு சென்று மதிய உணவு உண்டோம். பதிவுகள் நன்றாக வந்ததைக் கொண்டாட ஜிகர்தண்டாவும் சாப்பிட்டோம்.


(மதுரை) ஜிகர்தண்டா என்றால் அது ஐஸ்கிரீமும், நிறைய சர்க்கரையும், கடல் பாசியும் என்று நினைத்திருந்தேன். கடல் பாசி உடம்புக்கு நல்லது, அதனால் அதில் இருக்கும் சர்க்கரை பரவாயில்லை என்ற நினைப்பைத் தவிடுபொடி ஆக்கினார், அறிவியல் பேச்சாளர் சோபனா. இதில் கடல் பாசி இருப்பது மிக மிகக் குறைவு, வாயில் தெரியும் அந்தச் சுவைக்குக் காரணம் பாதாம் பிசின் என்றார். அதுவும் உடம்புக்கு நல்லதுதானாம்.
ஆனால் அந்த சர்க்கரை… அது இல்லையென்றால் என்ன சுவை?
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

