
Sanjay Subrahmanyan’s Music Concert
எனக்கு இசை அறிவு கிடையாது. சபாவிற்கு சென்று கச்சேரியில் உட்காரும் பொறுமையெல்லாம் நிச்சயம் கிடையாது. சீசன் டிக்கேட் கிடைத்தால் நாடகங்களுக்கு செல்வேன், அவ்வளவு தான்.
ஆனால் இன்று திரு சஞ்சய் சுப்ரமணியனின் “தமிழும் நானும்” இணைய வழி கச்சேரியில், தமிழ் பாடல்கள் என்பதால் அம்மாவுடன் அமர்ந்து வீட்டிலிருக்கும் திரையரங்கில் பார்த்தேன், கேட்டேன். அருமை. மெய் மறந்துப் போனேன். அவருக்கும் குழுவினருக்கும் நன்றிகள் பல.
அவர் பாடிய பல பாடல்களில் என்னைக் கவர்ந்தவை:
1) ஒருமையுடன் நினது திருமலரடி
நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.
இயற்றியவர்: ராமலிங்க வள்ளலார். Youtube link
2) ராமசாமி தூதன் நானடா – அடடா ராவணா
நானடா என் பேர் அனுமானடா…
இயற்றியவர்:அருணாசல கவிராயர்.
3) அகில சராசர பசுபதியாகிய அமல பராபர சதாசிவ
பகவ அபார நிரவதி கிருபாகர பரம கபாலி ச்வயம்பவ
இயற்றியவர்:அருணாசல கவிராயர். Youtube link
4) குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
இயற்றியவர்: திருமங்கை ஆழ்வார்
(இது என் தாத்தா லிப்கோ திரு சர்மா அவர்களுக்கு மிகப் பிடித்த பாடல்)

#MusicConcert #CarnaticMusic #HomeTheatre

