சென்ற வாரம் இந்தியத் தர நிர்ணய அமைவனம், (ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்குவது இந்த நிறுவனம் தான்) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் விற்கும் அனைத்து செல்பேசிகளுக்கும் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையில் தான் மின்னேற்றம் (சார்ஜிங்) இருத்தல் வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மடிக்கணினிகளிலும் இது கட்டாயமாக்கப்படும். யு.எஸ்.பி-சி ஏன் முக்கியம்?

‘சி’க்குச் சொல்வோம் சியர்ஸ்!

இன்று வந்துள்ள மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையில் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையின் தோற்றம், அதன் ஐந்து சிறப்புகளை விளக்கியுள்ளேன். ஒன்று, யு.எஸ்.பி-சி முறையில் தகவலை மட்டுமில்லாமல், சாதனத்தை இயக்கத் தேவையான மின்சாரத்தையும் சேர்த்துக் கடக்கச் செய்ய முடியும். இரண்டு, இந்த முறை செருகிகளை மேலே, கீழே என எப்படி வேண்டுமானாலும் சொருகலாம்.

முழுக் கட்டுரையும் படிக்க ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுக்கலாமே!

Categorized in:

Tagged in:

,