இன்று நடந்த பதிமூன்று புத்தக வெளியீட்டு விழா தமிழ் எழுத்து உலக வரலாற்றில் ஒரு புதுமை என நினைக்கிறேன். எழுதிய பெரும்பான்மையானவர்கள் முதல் முறை எழுத்தாளர்கள். விழாவிற்குத் தலைமை ஒரு சிறந்த எழுத்தாளர். சினிமா பிரபலங்களோ, அரசியல் பிரமுகர்களோ யாரும் இல்லை. காசுக் கொடுத்துச் செய்த விளம்பரம் எதுவுமில்லை. இருந்தாலும் அரங்கம் நிறைந்து உள்ளே போக முடியாதளவு கூட்டம். அதுவும், கே. கே. நகர், தென் சென்னையின் ஒரு கோடியில் இருந்த அரங்கில்.

புத்தகம் படைத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், அவர்களின் ஆசிரியர் பா.ரா.வுக்கு இப்படியான ஒரு நிகழ்வுக்கு நன்றி!

மெட்ராஸ் பேப்பர் காபி மக்குடன் வெங்கடரங்கன்

மெட்ராஸ் பேப்பர் காபி மக்குடன் வெங்கடரங்கன்

16 ஜனவரி 2023: சில நாட்களுக்கு முன் நடந்த (மேலே எழுதியுள்ள) மெட்ராஸ் பேப்பர் புத்தக வெளியீட்டு விழாவில் எதற்கோ என்னை திரு பா ராகவன் மேடையில் அழைத்து திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் கையால் கொடுத்த அன்புப் பரிசு காபி மக்குடன். நன்றி.

பின்குறிப்பு: இந்த படம் எடுப்பதற்காகவே பத்து நிமிடத்தில் அவசரம் அவசரமாக ஷேவ் செய்து, குளித்து, விடுமுறை நாளானாலும் அயன் செய்த டீ ஷர்ட்டை போட்டு, சமையலறையிலிருந்து மனைவியை அழைத்துக் கெஞ்சி நல்ல வெளிச்சத்தில் பிரத்தியேகமாக எடுக்க வைத்து வெளியிட்டு இருக்கிறேன்!

Categorized in:

Tagged in: