சாப்பாடு ஐட்டங்கள் அதிகம் கிடைப்பதால் எனக்குப் பிடித்த பண்டிகைகளில் முதலாவது ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி / கோகுலாஷ்டமி: இரண்டுக்கும் வித்தியாசம் என்ன இங்கே பார்க்கலாம். ஆனால், இந்தக் கிருஷ்ண ஜயந்தி பண்டிகையில், அதுவும் வைணவர்களான (பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வழிபடுபவர்கள்) எங்களுக்கு எல்லா வருஷமும் குழப்பம் தான். எந்தத் தேதியில் கொண்டாடுவது என்று ஒவ்வொரு வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கும் / குடும்ப வாத்தியார்களுக்கும் / மரபுக்கும் / ஜோசியர்களுக்கு / ஸ்ரீ ஆச்சார்ய மடத்திற்கும் ஏனோ ஒத்துப் போவதேயில்லை. நேற்று முந்தினம் வரை எங்கள் வீட்டில் என்று என்பது முடிவாகவில்லை. கடைசி நாளில் மாறும் திருப்பங்களும் பல வருடங்களில் இருக்கும், இந்த வருடமும் இருந்தது.

ஆனால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. போன மாதம் கோகுலாஷ்டமி வந்தப் போது ஸ்மார்த்த (சிவன் சம்பந்தமான வழிபாட்டைப் பிரதானமாகக் கொண்டவர்கள்) குடும்ப நண்பர் வீட்டிலிருந்து வெல்லச் சீடை, உப்புச் சீடை, தட்டை, வெல்லம், கல்கண்டு வெண்ணெய், பழங்கள் வந்தது. நேற்று என் அக்கா விட்டிலிருந்து வந்தது. இன்று எங்கள் வீட்டில் செய்திருக்கிறோம். [கொரோனா காரணமாக யாராவது நேராக எங்கள் வீட்டிற்கு வந்தால் தர மாட்டோம், மன்னிக்கவும்!]

வெல்லச் சீடை, உப்புச் சீடை, தட்டை

வெல்லச் சீடை, உப்புச் சீடை, தட்டை

நாளை அல்லது அடுத்த மாதம், யாராவது (நண்பர்கள்/உறவினர்கள்) கொண்டாடுகிறார்களா என்று தேட வேண்டும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு குடும்பத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும், அதைவிட இந்த கொலு பண்டிகை வருடத்தில் ஒவ்வொரு மாதம் வந்தால் சுண்டலுக்குப் பஞ்சமிருக்காது, எல்லா வீட்டு கொலுவையும், ஜூம் காலில் பார்த்து, பாடுவதற்கும், டன்ஸோ (Dunzo)வில் சுண்டலைப் பெறுவதற்கும் வசதியாக இருக்கும். இந்து பண்டிதர்களும், ஜோசியர்களும் இதைப் பரிசிக்கலாம் 🙂

[Earlier posts on Sri Krishna Jayanthi are here: 2012, 2013 & 2019]

Categorized in:

Tagged in: