கடை அங்காடிகள் (மால்கள்) சாகுமா?
மெல்லச் சாகும் அதற்கு உதாரணம் சென்னை ஸ்பென்சர் பிளாசா மற்றும் ராமீ மால் (திமுக அண்ணா அறிவாலயம் அருகில்).

சில ஆண்டுகள் உயிருக்குப் போராடி, மீண்டு வருமா?
மீண்டு வரலாம், அதற்கு உதாரணம் சென்னை சிட்டி சென்டர்.

சென்னையில் இருக்கும் மற்ற அங்காடிகளைக் காட்டிலும் சிறியது இது. சிறியதாக இருந்தாலும் மெரினா கடற்கரைக்கு அருகில் இருப்பதால், திறந்த முதல் பத்தாண்டுகள் சிட்டி சென்டர் மால் நன்றாகவே போனது. இந்த மாலுக்கு ஒரு பெரிய குறை, இங்கே போய் வரப் போக்குவரத்து வசதிக் குறைவு. அருகில் இரயில் நிலையம் கிடையாது, ‘கலங்கரை விளக்கம்’ பறக்கும் இரயில் நிலையமும் அரை கிலோ மீட்டருக்கு மேல், பேருந்து வசதியும் குறைவு என்றே நினைக்கிறேன்.

முதல் பத்தாண்டுகளைத் தாண்டி கடைகள் படிப்படியாக மூடப்பட்டுவிட்டது. பல ஆண்டுகள் ஐநாக்ஸ் திரையரங்கை மட்டுமே நம்பி நடந்தது இந்த மால். இந்த அங்காடியின் நிலை அவ்வளவு தான் என நினைத்த போது கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் மீண்டும் உயிர் பெற்றது. காரணம் சிட்டி சென்டர் மாலில் டாடா குழுமத்தின் கடைகள் திறக்கப்பட்டது. நேற்று திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன், ஓரளவு கூட்டம் வருகிறது போல.

சென்னை சிட்டி சென்டர்
சென்னை சிட்டி சென்டர்
Chennai Citi Centre, Mylapore, Chennai
Chennai Citi Centre, Mylapore, Chennai
Venkatarangan Thirumalai visiting Chennai Citi Centre, Mylapore
Venkatarangan Thirumalai visiting Chennai Citi Centre, Mylapore
Big Hello The Plus Life shop
Big Hello The Plus Life shop
VGP Cyber Kingdom Go Karting
VGP Cyber Kingdom Go Karting
VGP Cyber Cafe Gaming centre
VGP Cyber Cafe Gaming centre
Bata and Walkway shop
Bata and Walkway shop
Inox Citi Centre
Inox Citi Centre

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading