பல வருடங்களாக விநாயகர் சதுர்த்தி நன்னாளுக்கு இனிப்பு கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டையை நான் வாங்குவது தி.நகர் சுஸ்வாத் ஸ்வீட்ஸ் அண்ட் சவரிஸ் கடையில். அவர்களிடம் சுவையாகவும் தரமாகவும் இருக்கும். ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பே ஆர்டர் கொடுக்க வேண்டும், அப்போது தான் விநாயகர் சதுர்த்தி அன்றோ அதற்கு முதல் நாளோ கிடைக்கும்.
கடந்த சில நாட்களாக எனக்கு உடம்பு சரியில்லை, அதனால் அங்கே போக முடியவில்லை. இன்று கொழுக்கட்டை வாங்க எங்கே போவது என்று யோசித்த போது ஶ்ரீவாரி ஸ்வீட்ஸ், தி.நகர் நினைவிற்கு வந்தது. கோட்ஸ் சாலையில், ஜீ.ஆர்.டி. கடையில் இருந்து ஶ்ரீ ராகவேந்திர மடத்திற்கு போகும் வழியில் இவர்களது கடை இருக்கிறது. இவர்களுக்கு நகரில் இன்னும் சில பகுதிகளில் கடைகள் இருக்கின்றன.


ஶ்ரீவாரிக்குப் போய் இனிப்பு கொழுக்கட்டையை வாங்கினேன். ஒரு பெரிய டப்பாவில் பத்து கொழுக்கட்டைகளின் விலை ரூபாய் 270. காலை ஆறு மணியில் இருந்தே வியாபாரம் தொடங்கிவிட்டது என்றார் கடையில் இருந்த மேலாளர். நான் போன சமயம் காரக் கொழுக்கட்டை தீர்ந்துவிட்டது. அதனால் இரண்டு வகை சுண்டல்களை வாங்கினேன். ஒவ்வொரு சுண்டல் டப்பாவின் விலை ரூபாய் 100. சுவையாகவே இருந்தது, இனிப்பு சரியான அளவு இருந்தது – உங்களுக்கு தேவையென்றால் இங்கே வாங்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

