நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம்

சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே இருக்கும் சத்யா ஸ்டுடியோஸுக்கு (டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) எதிரில் இருக்கிறது இந்த மணிமண்டபம்.

பலமுறை அந்த வழியாகப் போயிருக்கிறேன். போக்குவரத்து நெரிசலான பகுதி, ஒரு திருப்பத்தைத் தவறவிட்டால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமும், பாலத்தை இரண்டு முறையும் தாண்டி வர வேண்டும். அதனால் ஒருமுறைகூட நிறுத்தி, உள்ளே போனதில்லை.

நேற்று மதியம் அடையாரில் சேப்பியன் சயின்ஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தேன். எனக்கு அடுத்து முக்கியமாகச் செய்ய வேலை எதுவுமிருக்கவில்லை, போக்குவரத்தும் அவ்வளவாக இல்லை. சரி, இங்கே என்னதான் இருக்கிறது, அன்றாவது உள்ளே போய்ப் பார்த்துவிடலாம் என்று உள்ளே சென்றேன்.

மொத்தமாக ஒரு சிறிய கட்டடம்தான், ஆனால் பிரதான அரசு இடத்தில் இருக்கிறது இந்த மண்டபம்.

என்னைத் தவிர யாரும் இல்லை. பார்க்கிங்கும் காலியாக இருந்தது. எளிதாகக் காரை நிறுத்திவிட்டு, சுற்றிப் படங்கள் எடுத்தேன். தனியாக நின்றுகொண்டிருந்த நடிகர் திலகத்தின் சிலையுடன் ஒரு தற்படம் (செல்பி) எடுத்துக்கொண்டேன்.

மண்டபத்தின் வாயிலில் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே செல்ல வேண்டும் என்று ஒரு பலகை அறிவுறுத்தியது. பொதுவாக வழிபாட்டுத் தலங்களில், சமாதிகளில் இது நடைமுறை. ஆனால் இது ஒரு அருங்காட்சியகம், இங்கே எதற்கு இப்படி என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் மரியாதை கருதி செருப்பைக் கழற்றிவிட்டுச் சென்றேன்.

உள்ளேயும் சிறிய இடம்தான். மண்டபத்தின் நடுவே, நான்கு மூலைகளிலும் (தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு) ஆங்கில L வடிவில் பழுப்பு நிறக் கல் சுவர்கள். ஒரு L வடிவச் சுவருக்கும் அடுத்ததற்கும் நடுவே நடந்துசெல்ல இடைவெளி. ஒவ்வொரு சுவரிலும் படங்கள். இந்த மாதிரி ஒரு அமைப்பை நான் வேறு எந்த அருங்காட்சியகத்திலும் பார்த்ததில்லை. இந்த நான்கு சுவர்களையும் சுற்றி, அதாவது மண்டபத்தின் சுற்றுச்சுவர்களின் உட்புறத்திலும் படங்கள். மொத்தமாக ஒரு நாற்பது, ஐம்பது படங்கள் இருக்கும், அவ்வளவுதான்.

சிலையையும் இந்தப் படங்களையும் தாண்டி, ஒரு தொலைக்காட்சித் திரை. அதில் நான் கேட்டுக்கொண்டதற்காகப் புன்னகையோடு வந்த ஊழியர் ஒரு காணொலியை ஓடவிட்டார். பத்து நிமிடம் ஓடும் ஆவணப்படத்தை நின்றுகொண்டே பார்க்க வேண்டும்; அமர நாற்காலிகள் கிடையாது.

ஒரு மாபெரும் கலைஞரின் திரைப்படங்களிலிருந்து எடுத்துக்காட்ட இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன; அவற்றையெல்லாம் இந்த ஆவணப்படம் தவறவிட்டிருக்கிறது. இதே பத்து, பதினைந்து நிமிடங்களில் உலகத் தரத்தில் ஒரு ஆவணப்படத்தைச் செய்திருக்கலாம். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களிடம் இந்தப் பணியைக் கொடுத்திருந்தால் நடிகர் திலகத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் பாசத்தில் இலவசமாக செய்திருப்பார்கள், ஆனால் அரசே செய்திருப்பதால் இந்த அளவு வந்ததே பெரிய விசயம் என்று நாம் சந்தோசப்பட வேண்டும்.

இருப்பதைத் தாண்டி நடிகர் திலகம் பயன்படுத்திய உடைகள், படப்பிடிப்பு அரங்குகளில் இருந்த பொருட்கள், திரைப்பட விருதுகள் என்று பலவற்றையும் காட்சிப்படுத்தலாம். அதோடு ஒரு சிறு திரையரங்கம் அமைத்து, அதில் நடிகர் திலகத்தின் படக்காட்சிகள் காட்டப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த மண்டபம் அரசு சார்பாகக் கட்டப்பட்டதாகவே டைம்ஸ் ஆப் இந்தியாவின் 26 செப்டம்பர் 2017 நாளிதழ் சொல்கிறது. கூடுதல் வசதிகளுக்கு அரசு செலவிடாமல் இருப்பது நல்லது. புது வசதிகளுக்குத் தேவையான புதிய தளங்களைச் சினிமாத் துறையும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டு செய்து கொடுக்கலாம்.

வளாகமும் மண்டபமும் சிறியவையாக இருந்தாலும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கே போய்ப் பார்க்க என்று குறிப்பாகச் சொல்ல எதுவுமில்லை என்பது வருத்தமே.

குறிப்பு: இந்தப் பதிவில் மண்டபத்தைத் திறந்தது எந்த அரசு, சிலையை வைத்தது எந்த அரசு என்று கட்சி அரசியலாகப் பேசவில்லை, பொதுவாகத் தமிழக அரசு என்ற முறையிலேயே என் கருத்துகளைச் சுட்டிக்காட்டியுள்ளேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.

I stopped to photograph the memorial’s Tamil and English nameboards in Adyar.
I stopped to photograph the memorial’s Tamil and English nameboards in Adyar.
I photographed the garlanded statue.
I photographed the garlanded statue.
I took in the entrance and the greenery surrounding the memorial.
I took photos of the entrance and the greenery surrounding the memorial.
Two photographs from my visit: one at the entrance and another beside the statue.
Two photographs from my visit: one at the entrance and another beside the statue.
 I made my way past the entrance plaque and into the gallery, where a full-length standing portrait of Sivaji Ganesan is displayed.
I made my way past the entrance plaque and into the gallery, where a full-length standing portrait of Sivaji Ganesan is displayed.
I walked through the gallery, taking in the photographs and the light reflected on the polished floor.
I walked through the gallery, taking in the photographs and the light reflected on the polished floor.
I paused at photographs from his public life and stills from his films.
I paused at photographs from his public life and stills from his films.
These ceremonial and archival photographs caught my eye as I looked around the gallery.
These ceremonial and archival photographs caught my eye as I looked around the gallery.
I photographed the bilingual filmography, which lists his films along with their release dates.
I photographed the bilingual filmography, which lists his films along with their release dates.
I photographed these two moments from the 10-minute documentary on Sivaji Ganesan shown in the gallery.
I photographed these two moments from the 10-minute documentary on Sivaji Ganesan shown in the gallery.

Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading