தமிழக ஆட்டோ கட்டண உயர்வும் பயணிகளின் நிலையும்

தமிழக ஆட்டோ பயணிகளை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். ஆனால் அவருக்கு மயில், கருடர், மூஞ்சூறு என பல வாகனங்கள் இருப்பதால் அவரின் பார்வை இதில் இருப்பதில்லை.

நேற்று ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு அவசரமாக ஆட்டோவில் செல்ல நூறு ரூபாய் கொடுத்தேன். ஸ்டாண்ட் ஆட்டோ என்பதைக் குறிப்பிட வேண்டிய அவசியத்தை சென்னைவாசிகள் புரிந்துகொள்வார்கள்.

தமிழகத்தில் 2-3 கிலோமீட்டருக்குக் கூட குறைந்தபட்ச கட்டணம் நூறு ரூபாய் என்று மாறி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ராபிடோவில் சில மாதங்களுக்கு முன்பு வரை கட்டணம் பரவாயில்லை. ஆனால் இப்போதெல்லாம் அங்கேயும் அதிகமே.

இந்த சூழ்நிலையில் குறைந்தபட்ச கட்டணத்தை சட்டமாக மட்டும் வைத்து, நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதைவிட அரசு இதை அந்தந்த சங்கங்களிடமே விட்டுவிடலாம். லஞ்சமாவது குறையும்.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறலாம், ஆட்டோக்களின் அடாவடியை மாற்ற முடியாது. இந்த விலையேற்றமும் எந்த பயனும் அளிக்காது. இனி வரும் ஆட்சிகளிலும் இந்த அவலம் தொடரும் என்றே நினைக்கிறேன். ஆனாலும் அதிகாரப்பூர்வ் விலை ஏற்றத்தை இப்போதாவது செய்ததற்கு அரசுக்கு நன்றி. தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை, அதோடு ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறும்போது விலையை ஏற்ற வேண்டும். இதை அரசின் இணையத்தளமே/செயலியே செய்துவிட அரசாணை வெளியிடலாம்.

பெட்ரோல் விலை கூடிக்கொண்டே போகிறது, போக்குவரத்தும் அதிகரித்துவிட்டது, மெட்ரோ பணியில் வண்டியே ஓட்ட முடியவில்லை, ஒரு நாள் வாடகையும் புது வண்டியின் விலையும் பல மடங்கு ஏறிவிட்டது என்று ஓட்டுநர் தரப்பு வாதங்கள் புரிகின்றன. தொழிலாளிகளை நினைத்து வருந்துகிறேன். அதே சமயம், இதற்கு தீர்வு அடாவடியில்லை. வருவேன் என்று செயலியில் சொல்லிவிட்டு வராமல் இருப்பதும் தீர்வில்லை.

விலைவாசி ஏற்றம், அதுவும் அன்றாட செலவான ஆட்டோ கட்டண ஏற்றம் மக்களுக்கு பெரிய சுமையே. மறுக்கவில்லை. யதார்த்தத்தையே இங்கே சொல்லியுள்ளேன்.

கீழே இருக்கும் படங்கள் ஏஐ உருவாக்கமில்லை, அனைத்தும் நான் எடுத்தவை.

 


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading