சென்னையில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை. இன்றும் மழை இருக்கும் என்பதை உணர்த்தும் வண்ணமாக காலை பத்து மணிக்குக் கூட வானம் மிக இருட்டாகவே இருக்கிறது.

வெள்ளிக்கிழமை சினிமாவிற்குப் பிறகு, கடந்த நான்கு நாட்களாக நான் வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கவில்லை என்றாலும், முக்கியமான வேலை இல்லாததால் வெளியேறவில்லை.

இன்று காலை காரில் பெட்ரோல் குறைவாக இருப்பது நினைவு வர, அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க் சென்று நிரப்பினேன். அப்படியே பசிக்கத் தொடங்கவே, அருகில் உள்ள ஆந்திரா டிபன் ரூம் (மைலாப்பூர் மியூசிக் அகாடமி எதிரில்) சென்றேன்.

அவர்களின் மினி-டிபன் (ATR Tiffin Combo) மற்றும் ஒரு ஃபில்டர் காபி சாப்பிட்டு நிறைவான மனத்தோடு வீடு திரும்பினேன்.

விலை: ATR Tiffin Combo – ₹119, Coffee – ₹47.

நீங்க இந்த மழையில் என்ன சாப்பிட்டீங்க?

Andhra Tiffin Room - ATR Tiffin Combo
Andhra Tiffin Room – ATR Tiffin Combo

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “மழையும், மயிலாப்பூர் மினி டிபனும்!”

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading