முந்தைய பதிவில் வேளச்சேரியில் உள்ள “விபி வோர்ல்டு” உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட அனுபவத்தை எழுதியிருந்தேன். இன்று, அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, நண்பர்களுடன் நால்வராக மதிய உணவுக்காக மீண்டும் அதே இடத்துக்குச் சென்றோம்.

இந்த முறை அனுபவம் இன்னும் சிறப்பாக இருந்தது. உணவகத்தின் சூழல் அமைதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. உணவின் சுவை, அளவு, பரிமாறும் முறை எல்லாமே நன்றாக இருந்தது. குறிப்பாக மேற்பார்வையாளர் திரு. பாண்டியராஜன் மிகுந்த அன்பாக இருந்தார். ஒவ்வொரு உணவையும் விளக்கி, எதை எடுக்கலாம் என்று சொல்லி உதவினார். அவரின் பரிந்துரைகள் சரியாகப் பொருந்தின. சாப்பிடும் போது, உள்ளூர் உணவுகளைத் தயாரிக்கும் முக்கியச் செஃப்பையும் சந்தித்தோம்.

நாங்கள் சாப்பிட்டவை:

சூப்
• தேங்காய் மற்றும் மஞ்சள் பூசணிக்காய் சூப் (Coconut & Yellow Pumpkin Soup)

ஸ்டார்டர்ஸ்
• சேப்பங்கிழங்கு வறுவல் (Cheppankizhangu Roast)
• மூன்று வகை பனீர் டிக்கா (Trio Paneer Tikka)
• வெஜ் பாப்கார்ன் (Veg Popcorn)
• மலாய் ப்ரொக்கோலி (Malai Broccoli)

முக்கிய உணவுகள்
• மிளகாய் பூண்டு நூடுல்ஸ் (Chilly Garlic Noodles)
• ஹாட் பாட்ட் தாய் கிரீன் கறி (Hot Pot Thai Curry – Green)
• சர்க்கரை வள்ளிக்கிழங்கு வடா பாவ் (Sweet Potato Vada Pav)
• சவ்வரிசி பெல் (Sago Bhel)
• சுக்கா மற்றும் பூண்டு சாதம் (Sukka and Garlic Rice)
• தாமரை தண்டு வறுவல் (Lotus Stem) – எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் திருப்பி அனுப்பினோம்.

இனிப்புகள் மற்றும் பானங்கள்
• தர்பூசணி பழச்சாறு (Watermelon Juice)
• சில்க் சாக்லேட் (Silk Chocolate)
• வெணிலா பீன் ட்ரெஸ் லேச்சே (Vanilla Bean Tres Leches)
• காபி மாஸ்கர்போன் (Coffee Mascarpone)

அனைத்தும் நன்றாகச் சமைக்கப்பட்டு சுவையாக இருந்தது. குறிப்பாக சூப், பனீர் டிக்கா, தாய் கரி, காபி மாஸ்கர்போன் மிகவும் பிடித்தது. சேவை வேகமாகவும் நயமாகவும் இருந்தது.

தேங்காய் மற்றும் மஞ்சள் பூசணிக்காய் சூப் (Coconut & Yellow Pumpkin Soup)
தேங்காய் மற்றும் மஞ்சள் பூசணிக்காய் சூப் (Coconut & Yellow Pumpkin Soup)
சேப்பங்கிழங்கு வறுவல் (Cheppankizhangu Roast)
சேப்பங்கிழங்கு வறுவல் (Cheppankizhangu Roast)
மூன்று வகை பனீர் டிக்கா (Trio Paneer Tikka)
மூன்று வகை பனீர் டிக்கா (Trio Paneer Tikka)
தாமரை தண்டு வறுவல் (Lotus Stem)
தாமரை தண்டு வறுவல் (Lotus Stem)
மலாய் ப்ரொக்கோலி (Malai Broccoli)
மலாய் ப்ரொக்கோலி (Malai Broccoli)
வெஜ் பாப்கார்ன் (Veg Popcorn)
வெஜ் பாப்கார்ன் (Veg Popcorn)
மிளகாய் பூண்டு நூடுல்ஸ் (Chilly Garlic Noodles)
மிளகாய் பூண்டு நூடுல்ஸ் (Chilly Garlic Noodles)
ஹாட் பாட்ட் தாய் கிரீன் கரி (Hot Pot Thai Curry – Green)
ஹாட் பாட்ட் தாய் கிரீன் கரி (Hot Pot Thai Curry – Green)
சவ்வரிசி பெல் (Sago Bhel)
சவ்வரிசி பெல் (Sago Bhel)
சுக்கா மற்றும் பூண்டு சாதம் (Sukka and Garlic Rice)
சுக்கா மற்றும் பூண்டு சாதம் (Sukka and Garlic Rice)
காபி மாஸ்கர்போன் (Coffee Mascarpone)
காபி மாஸ்கர்போன் (Coffee Mascarpone)

மொத்தத்தில் “விபி வோர்ல்டு” மதிய உணவு நல்ல அனுபவமாக இருந்தது. விலை சற்று அதிகம், நால்வருக்கு ரூபாய் 3800 ஆனது. ஆனால் சிறப்பு நாளில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களுடன் சாப்பிடச் செல்ல உகந்த இடம். அடிக்கடி போகும் இடமல்ல.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading