ரத்னா கபே மசாலா தோசைக்கு நடுவில் நிறையச் சாம்பார் விட்டுச் சாப்பிடுவது சுவை என்றாலும், தோசை முடிந்தவுடன் வெறும் சாம்பாரை மட்டும் ஊற்றி உள்ளங்கையில் வழித்து வழித்துச் சாப்பிடுவது அமிர்தம் உண்டதை போன்ற உணர்வை அளிக்கும். ஒரு டப்பா முழுக்க பனிக்கூழ் சாப்பிட்டாலும் கரண்டியில் ஒட்டியிருக்கும் கடைசி வாய் தான் நினைவில் நிற்கும், அது போன்றது இந்த வெறும் (ரத்னா கபே) சாம்பாரை உறிஞ்சுவது. ரத்னா கபே சாம்பார் முன் போல இல்லை என்று பெருசுகள் சொல்கிறார்கள், நான் பூமர் இல்லை என்று என் மகனிடம் நிரூபிக்க வேண்டியிருப்பதால் நான் அதைச் சொல்ல மாட்டேன் 🙂

பின் குறிப்பு: மேலே இருப்பது இன்று நான் ஸ்வீகியில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடும் போது எடுத்த படங்கள்.

Categorized in:

Tagged in: