
Animal Farm by George Orwell
ஜார்ஜ் ஆர்வெல் 17 ஆகஸ்ட் 1945ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (Animal Farm) (Animal Farm). 66 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் பி.வி.ராமஸ்வாமி மொழி பெயர்த்திருக்கிறார், கிழக்கு பதிப்பகத்தின் 2012ஆம் ஆண்டு வெளியீடு. நண்பர் பத்ரியின் வலையில் படித்துவிட்டு நேற்று தான் வாங்கினேன், கையில் எடுத்ததிலிருந்து படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை, அவ்வளவு சுவையாக இருந்தது. சில புத்தங்களை ஏன் தான் மொழிப் பெயர்ப்பை படித்தோம் என்று எண்ண வைக்கும், வெகு சில தான் (நம் நல்ல காலம்) தாய் மொழி தமிழில் படித்தோம் என்று தோன்றும். அப்படி எனக்குப்பட்டதில் இது இரண்டாவது புத்தகம் (முதலாவது: சீனா-விலகும் திரை).
விலங்குப் பண்ணை புத்தகத்தைப் படிக்கும் போது நமக்கு சிரிப்பு, சிந்தனை என இரண்டு உணர்ச்சிகளும் இணைந்தே வருகிறது. வேறும் 140 பக்கங்களில் (ஆங்கிலப் பதிப்புக்கூட இதே அளவு தான்) ஒரு முழு கதையை நகைச்சுவையாகவும், அதே சமயம் ரஷ்ய ஸ்டாலினிஸத்தை நையாண்டி செய்துக் கொண்டே, ஆழமான கருத்தையும் சேர்த்து சொல்வது என்றால், அது ஒரு சிறந்த எழுத்தாளாரால் மட்டுமே முடியும், அதை திறம்பட செய்துள்ளார் திரு ஜார்ஜ் ஆர்வெல். அதனால் தான் அவர் மறைந்து 65 ஆண்டுகள் ஆனாலும் இந்தப் புத்தகம் இன்றும் பலரால் வாசிக்கப்படுகிறது, ரசிக்கப்படுகிறது.
மிக உயர்ந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்படும் புரட்சிகள் கூட எப்படி சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் உருமாரி, சிதைந்துவிடுகிறது என்பதற்கு அனிமல் ஃபார்ம் ஒரு சிறந்த கையேடு. போன வருடம் நடந்த அரப் ஸ்பிரிங்க் இதன் இன்றைய கால அடையாளம். சர்வாதிகாரத்தின் கொடிய முகத்தை ஆசிரியர் உன்னிப்பாக சொன்னாலும், விலங்குகளை வைத்து கதைச் சொல்லி சொல்வதால் நமக்கு எளிதாகப் புரிகிறது. ரஷ்ய ஸ்டாலினை நெப்போலியன் என்கிற பன்றியும், ட்ராட்ஸ்கியை ஸ்நோபால் என்கிற பன்றியும், லெனினை ஓல்ட் மேஜர் என்கிற வெள்ளைப் பன்றியும் அப்படியே இயல்பாக நம் கண்முன்னார் கொண்டுவருகிறது.

விலங்குகளின் கீதமாக ஒரு பாடல் வருகிறது, அதை ஆங்கிலத்தில் படிப்பதை விட தமிழில் வரும் பாடல் எனக்கு புரிந்தது, பிடித்தும் இருக்கிறது. நீங்களே பாருங்களேன்,
இது ஆங்கில வடிவும்:
Beasts of England, Beasts of Ireland,
Beasts of every land and clime,
Hearken to my joyful tidings
Of the Golden future time.Soon or late the day is coming,
Tyrant Man shall be o’erthrown,
And the fruitful fields of England
Shall be trod by beasts alone.Rings shall vanish from our noses,
And the harness from our back,
Bit and spur shall rust forever,
Cruel whips no more shall crack.….
Full version in Wikipedia here.
இது தமிழ் வடிவம்:
இங்கிலாந்தின் விலங்கினமே அயர்லாந்தின் விலங்கினமே
உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் விலங்கினமே
ஒளிமயமான எதிர்காலம் பற்றி நான் சொல்வதைக் கேளுங்கள்கொடுமைக்கார மனிதனை ஒழிக்கும் காலம் வரத்தான் செய்யும்
இங்கிலாந்தின் வயல்வெளியெங்கும் விலங்குகள் மட்டுமே இருக்கும்நம் முக்கிலிருந்து வளையங்கள் போகும், முதுகிலிருந்து சேணம் வாய்ப்பூணும்
குத்துக் கம்பியும் துருப்பிடிக்கும்; சாட்டைகள் செயலிழக்கும்மனத்தால் நினைக்கமுடியாத செல்வம், தானியம், வைக்கோல்
இன்னும் பலப்பல உணவுகள் அனைத்தும் இனி நமதேஇங்கிலாந்தின் வயல்கள் ஜொலிக்கும், நீர் சுவையாய் இனிக்கும்
நாம் சுதந்தரம் அடையும் அன்று காற்றும் இனிமையாய் வீசும்அந்நாளுக்காய் அனைவரும் உழைப்போம், உயிர் போனாலும் போகட்டும்
மாடும் குதிரையும் வாத்தும் கோழியும் உழைப்போம் விடுதலைக்காகஇங்கிலாந்தின் விலங்கினமே அயர்லாந்தின் விலங்கினமே
உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் விலங்கினமே
ஒளிமயமான எதிர்காலம் பற்றி நான் சொல்வதைக் உலகெங்கும் பரப்புங்கள்!
என்ன அருமையான பாடல், என்ன அற்புதமான மொழிப் பெயர்ப்பு!. தமிழ் மொழிப் பெயர்ப்பாளர் திரு பி.வி.ராமஸ்வாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.


4 Comments
Vassan
> I didn’t realize I have readers < :) I do drop by on occasions and find your articles worth browsing through. Best regards.
PVR
Thank you. I just chanced upon this, now. :)
Pavani
Hi Venkat,
I came across your blogging website and found many useful stuffs, but since i’m from Karnataka, i dont understand or read Tamil, so i go copying the url to translate using Google Language Tools. I have a small suggestion as a reader, it would be nice if you can place some translation tool that automatically translates your featured blog articles into english. Good day ahead :)
Thanks
Pavani
venkatarangan
Thanks Pavani. I didn’t realize I have readers, and that too for my Tamil post from Non Tamilians :-) I will see what I can do that’s easy to use.