இந்தப் படத்தை தமிழ் கூறும் நல் உலகில் கடைசியாகப் பார்த்தது நான் தான் போல, படம் பொங்கலுக்கு கலைஞர் டிவியில் கூட வந்துவிட்டது. இந்த வாரம் எங்கள் கிளப்பில் வேலாயுதம் என்று சொல்லிவிட்டு இதைப் போட்டார்கள்.

கோ”வில் ஜீவா (Jiiva) சண்டைக்காட்சிகளை பொளந்துக்கட்டுகிறார், பாராட்டுக்கள். நான் முக்காலியை வைத்து படம் எடுத்தால் கூட கோனலாகத் தான் வருகிறது, மனுஷன் ஒருகையில் ஏன் இருவிரலில் எடுக்கும் படங்கள்கூட சரியாக வருகிறது, நம்ம ஊர் 3ஜியில் மின் அஞ்சலே கஷ்டம் ஆனால் ஜீவா முழுஅளவு படங்களாக அனுப்பித் தள்ளுகிறார்.

கார்த்திகா ராதாவை நினைவுப்படுத்துவதோடு நின்று விடுகிறார், நடிப்பு முகபாவம் எதுவுமில்லை, அடுத்தப் படத்தில் பார்க்கலாம். வில்லன் வசந்தன் பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார் அஜ்மல் அமீர், சில கோணங்களில் இயக்குனர் திரு.வாசுவின் மகன் ஷக்தியைப் போல இருக்கிறார். கதாநாயகி கார்த்திகா (Karthika Nair) அழகாக வந்து போகிறார், அவரின் அம்மா ராதாவை பல காட்சியில் நினைவுப்படுத்துகிறார். கதை தமிழ் நாவல் கதாசிரியர்களான சுபா (Subha), பாராட்டுக்கள். நல்ல சுவாரஸ்யமான தரைக்கதை இயக்குனர் கே.வி. ஆனந்த் (K.V. Anand) அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

முடிவில் எனக்கு உடன்பாடுயில்லை. என்ன காரணம் சொன்னாலும் பாத்திரிகைகள் உண்மையை மக்களுக்குச் சொல்லத்தான் வேண்டும்.

Ko (2011)

Ko (2011)

Categorized in:

Tagged in:

,