சீனா – விலகும் திரை” என்ற இந்தப் புத்தகம் திருமதி.பல்லவி அய்யர் (இவர் என்.டி.டி.வியில் பணியாற்றி போது நமக்கு எல்லாம் தெரிந்த முகம்) அவர்களின் “Smoke and Mirrors: An Experience of China” என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம். சாதாரணமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை ஆங்கிலத்தில் படிப்பது தான் ஆசிரியர் சொல்ல வந்ததை நாம் சரியாகப் புரிந்துக் கொள்ள முடியும் என்பது எனது கருத்து. ஆனால் கிழக்கு பதிப்பத்தின் கடையில் இந்த நூலைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது, முக்கியமாக அதில் கேட்டு இருந்த  கேள்வி என்னை சிந்திக்க வைத்தது – “சீனாவைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? ஒன்றும் தெரியாது என்பது தான் உண்மை”.

பல்லவி அய்யர்  2002ல் இருந்து 2007வரை ஐந்து ஆண்டுகள் பேய்ஜிங்கில் வாழ்ந்த அனுபவத்தில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். மேலோட்டமாக சீனாவைப் பற்றிய நூல் அல்ல இது, அவர்களுடன் வாழ்ந்து, சீனா மொழியைக் கற்று அதைப் பேசி, சீனாவில் உள்ள இன்றைய தலைமறையினருக்கு பாடம் எடுத்த அனுப்பவத்தில் எழுதப் பட்ட நூல்.  பல்லவி அய்யரின் சீனா வாழ்க்கை அனுபவங்களோடு, சீனாவின் பல்வேறு மாநிலங்கள்/நகரங்களுக்குச் அவர் சென்ற பயண அனுபவங்களையும் சேர்த்து சேர்த்து  புத்தகம் நகர்வதால் ஆரம்பம் முதல் கடைசிவரைச் சுவை குறையவேயில்லை. ஆசிரியர் ஒரு இந்தியர் என்பதால், ஒரு இந்தியராக எனக்குப் படிக்கும் போது சீனாவைப் பற்றி தோன்றியப் பல கேள்விகளை ஆசிரியரே கேட்டு அதற்குப் பதிலும் சொல்லியிருப்பது இன்னும் நன்றாக உள்ளது.

கடைசியாக புத்தகத்தை முடிக்கும் போது இப்படி முடிக்கிறார் “இந்தியாவிடம் இருந்து சீனாவும், சீனாவிடம் இருந்து இந்தியாவும் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஒன்றின் பலம், மற்றொன்றின் பலவீனம்”.

இந்த புத்தகமும் நான்  இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் வாங்கியது. புத்தகம் வாங்கிய இரண்டு வாரங்களிலேயே படித்து முடித்தது எனக்கு ஒரு சாதனை (சும்மா தான்) என்றால் அதற்கு முழுக்காரணம் நூலின் ஆசிரியர் பல்லவி அய்யர் மற்றும் தமிழில் (அருமையாக) மொழிப் பெயர்த்த திரு.ராமன் ராஜாவும் தான்.

[If you are an English speaker, I highly recommend reading this book “Smoke and Mirrors: An Experience of China”  by Pallavi Aiyar]

Categorized in:

Tagged in:

,