கி.மு. கி.பி., இது மதன் அவர்கள் எழுதி குமுதத்தில் வெளியான ஜாலியான சரித்திரத் தொடர். எனது நண்பர் பத்ரி ஸேஷாத்ரி அவர்களின் கிழக்கு பதிப்பகம் இதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளது. நான் இந்தப் புத்தகத்தைக் காசுப் போட்டு வாங்கவில்லை, போன வருடம் கேசவன் கம்புயூட்டர் நிறுவன விழாவில் இலவசமாகக் கிடைத்தது :-). அதனால் தான் என்னவோ இதைப் படிக்க இவ்வளவு நாட்கள் ஆயிற்று.
சரித்திரத்தைக்கூடச் சுவையாகக் கொடுத்துள்ளார் மதன். அதற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் தலைப்பை கி.மு. கி.பி. என்று வைத்துவிட்டு கிமுவில் நடந்ததை மட்டுமே எழுதியுள்ளார் மதன். அடுத்த பாகம் வருமோ என்னவோ யார் கண்டார்?
நியாண்டர்தால் மற்றும் ஹோமோஸேபியன் என்று மனிதன் தோன்றியக் கதையில் ஆரம்பித்து, பாபிலோனியா, எகிப்து, கிரேக்க நாகரிகங்களை விலாவாரியாகச் சொல்லி இந்தியாவின் மௌரியர்களின் வீழ்ச்சுயில் புத்தகத்தை முடித்துள்ளார் மதன்.