நிதித் துறைக்கான தொழில்நுட்பங்களைக் குறிக்கும் ஃபின்டெக் (Fintech) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஃபெம்டெக் (FemTech) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஃபெம்டெக் என்பது பெண்கள் சார்ந்த, பெண்களுக்கான தொழில்நுட்பங்கள். இப்படியான நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிவந்துள்ள செயலிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயலி ஃப்ளோ (Flo). 2025ஆம் ஆண்டு தொடர்ந்து பல ஆண்டுகள் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும், கூகுள் பிளே ஸ்டோரிலும் உடல் ஆரோக்கியம் பட்டியலில் முன்னணியில் இருப்பதும் ஃப்ளோ செயலியே. இத்தனை புகழ்பெற்ற செயலியைத் தயாரித்தது இரு ஆண்கள் என்றால் நம்பமுடிகிறதா?
ஃப்ளோ செயலியின் முக்கியமான வசதி, பெண்கள் அவர்களின் மாதவிடாய் அட்டவணையைக் கணிக்க உதவுவது. பெண் பயனர்கள் அவர்கள் உடலில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் மாற்றங்களை உள்ளிடுவதன் மூலம் மாதவிடாய் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே ஓரளவுக்குச் சரியாகத் தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக, மாதவிடாய்ச் சுழற்சியை வைத்து எந்தெந்த நாட்களில் ‘கருமுட்டை வெளியாகும்’ (Ovulation) என்பதையும் கணித்துச் சொல்கிறது செயலி. முழுக்க முழுக்க நீங்கள் கொடுக்கும் தகவல்களை வைத்து மட்டுமே உங்களுக்கான விவரங்களைக் கொடுக்கிறது ஃப்ளோ.
தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

