கடந்த ஞாயிறன்று, மெட்ராஸ் பேப்பர் விழாவில் வெளியிடப்பட்ட சொல்வெளி உரைத்திருத்தியின் அறிமுக காணொலி. ஆசிரியர் திரு பா ராகவன், இதனைச் சொகுசான அனுபவம் என்று பாராட்டுகிறார்.
Neight (சொல்வெளி) செயலி முற்றிலும் இலவசமாக, திறந்த மூல மென்பொருளாக (ஓபன் சோர்ஸ் முறையில்), விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளுக்கு கிடைக்கிறது. செயலி கிடைக்கும் இணைய முகவரி.
இது எழுத்தாளர்களுக்காகவும், வலைப்பதிவர்களுக்காகவும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஓர் எளிய உரைத்திருத்தி (Text Editor).
விண்டோஸ் நோட்பேடில் தமிழ் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் சில சிரமங்களைத் தவிர்க்கவும், எந்தவிதக் கவனச்சிதறலும் இல்லாமல் அமைதியாக எழுதவும் ஒரு வசதித் தேவைப்பட்டது. அதற்காகவே இந்த ‘சொல்வெளி’யை உருவாக்கினேன்.
இதன் சிறப்பம்சங்கள்:
🔠 தமிழ் – ஆங்கிலம்: இரு மொழிகளிலும் எளிதாக மாற்றி எழுதலாம். (Ctrl பொத்தானை இருமுறை அழுத்தினால் விசைப்பலகை இயல்பாகவே மாறிவிடும்).
🔒 முழுமையான தனியுரிமை: இதற்கு இணையத் தொடர்பு தேவையில்லை. செயற்கை நுண்ணறிவு (AI) தலையீடோ, உங்கள் பயன்பாட்டுத் தரவுகளைச் சேகரிக்கும் பின்னணி வேலைகளோ (Telemetry) இதில் அறவே இல்லை. உங்கள் எழுத்து உங்கள் கணினியில் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்.
💻 பயன்பாடு: விண்டோஸ் மற்றும் மேக் (macOS) இயங்குதளங்களுக்குக் கிடைக்கிறது.
🆓 முற்றிலும் இலவசம்: எந்தக் கட்டணமும் இல்லை. இது ஒரு திறந்த மூல மென்பொருள் (MIT License அடிப்படையில் வழங்கப்படுகிறது).
எழுதும் கலையை நேசிப்பவர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நீங்களும் தரவிறக்கம் செய்து, பயன்படுத்திப் பாருங்கள். உங்களின் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!
தரவிறக்கம் செய்ய இங்கே போகவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

