Apps

புதிரோடு விளையாடு

இன்று உலகம் முழுவதும் பலரும் ஒவ்வொரு நாளும் பலமணி நேரத்தை செல்பேசிகளில் காணொளிகளைக் கண்டு செலவழிக்கிறார்கள். இதோடு செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இவற்றின் தாக்கம் மாணவர்களின் கல்வி முறையையும் விட்டுவைக்கவில்லை. பிள்ளைகள் பலரும் தங்களின் பாடங்களைக் கற்க இவற்றையே…

செயலி+கைவினை= செய்வினை?

இன்றைக்கு இன்ஸ்டாகிராமில் உணவுப் படங்கள், பயணப் படங்களுக்கு அடுத்தபடியாகப் பிரபலமாக இருப்பவை கைவினைப் பொருட்களைப் பற்றிய பதிவுகள். இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இதற்காகவே ஒரு செயலியை உருவாக்கினால், அது டெடோ (Tedooo) போலவே இருக்கும். மிச்செல் அபெல்கர் (Michelle Apelker)…

பயனர் உதவியாளராக பில் கேட்ஸ்

புதிதாக வந்திருக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. உதவி கோரினால் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸே நேரடியாகப் பதிலளிக்கிறார் என்றால் சந்தேகமே வேண்டாம். நீங்கள் தரவிறக்கியது ஃபியா (Phia) ஃபேஷன் செயலியாக இருந்தால், அது பில் கேட்ஸ்தான். சமீபத்தில்…

ஹேப்பியான பசுமாடுகள்

ஹாப்பி கௌ (Happy Cow) என்கிற பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ பசு மடம் பற்றிய செயலி என்று நினைக்க வேண்டாம். இது நனிசைவர்களுக்கான (தீவிரச் சைவ உணவினர்) வழிகாட்டி. ஆங்கிலத்தில் வீகன் (Vegan) என்று அழைக்கப்படும் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள்…

மூன்று பேர், மூன்று நிமிடம்

‘இந்தியாவின் ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் இருக்கும் பெட்டிக்கடைகளை நடத்துபவர்களும் எங்கள் வாடிக்கையாளர்கள்தான். நாள் முழுவதும் கடையிலேயே இருப்பவர்களுக்குத் திறமைகள் இருக்கும், ஆசைகள் இருக்கும், ஆனால் நேரம் இருக்காது. உதாரணமாக ஒரு யூட்யூப் சேனலை நடத்துவது எவ்வளவு சுலபம் என்பது தெரிந்தால் இவர்களும் வெற்றி…

AI இசைராஜா

எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறுவார்கள். அந்தளவு ஒவ்வொருவருக்கும் இசை விருப்பம் தனிப்பட்டது. இதைச் சொன்னவர் பெரிய இசைக் கலைஞரோ மேதையோ இல்லை. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு யார் வேண்டுமானாலும் பாடல்களை உருவாக்க உதவும் சுனோ.ஏஐ (Suno.AI) செயலியின் நிறுவனரான…

சேர்த்து வைத்துப் படி!

தினமும் பல இணைய முகவரிகளை நாம் கடக்கிறோம். ஒரு சில கட்டுரைகளைப் படித்தவுடன் இது முக்கியமானது என்று தோன்றும். அதே போல வாட்ஸ்ஆப்பில் அல்லது பேஸ்புக்கில் வரும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரை நம் ஆர்வத்தைத் தூண்டும். ஆனால் அப்போது படிக்க நேரமிருக்காது.…

சுருக்கிக் கொடு!

ஜெர்மனிக்கும் புத்தகங்களுக்கும் என்றுமே ஓர் அரிய தொடர்புண்டு. பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு எந்திரத்தை கண்டுபிடித்த “யோகான்னஸ் குடன்பர்க்” ஒரு ஜெர்மானியர். அந்தத் தயாரிப்பு, கற்றலை எல்லோருக்கும் பரவலாக்கியது. அதைப் போலவே இன்றைய செல்பேசி உலகில் நூல்கள் வாசிப்பை எல்லோருக்கும் எடுத்துச் செல்லும்…