ஜெர்மனிக்கும் புத்தகங்களுக்கும் என்றுமே ஓர் அரிய தொடர்புண்டு. பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு எந்திரத்தை கண்டுபிடித்த “யோகான்னஸ் குடன்பர்க்” ஒரு ஜெர்மானியர். அந்தத் தயாரிப்பு, கற்றலை எல்லோருக்கும் பரவலாக்கியது. அதைப் போலவே இன்றைய செல்பேசி உலகில் நூல்கள் வாசிப்பை எல்லோருக்கும் எடுத்துச் செல்லும் செயலி பிளின்கிஸ்ட் (Blinkist). இதுவும் ஒரு ஜெர்மானியத் தயாரிப்பே.

‘நாங்கள் தொடங்கிய போது பெரும்பாலான செயலிகள் விளையாட்டுக்காகவும், சமூக வலைத்தளங்களாகவுமே இருந்தன. இதைவிடுத்து வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு செயலியைத் தயாரிக்க வேண்டும் என்று எண்ணினோம்’ என்கிறார் பிளின்கிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஹோல்கர் சீம் (Holger Seim). 2012இல் இவரும் நண்பர்கள் நிக்லஸ் ஜான்சன், செபாஸ்டியன் க்ளைன் மற்றும் டோபியாஸ் பாலிங் ஆகியோரால் பெர்லின் (Berlin) நகரில் தொடங்கப்பட்டது பிளின்கிஸ்ட். இந்தச் செயலியானது அபுனைவு நூல்களைச் சுருக்கி, அதில் சொல்லப்பட்டுள்ள முக்கியக் கருத்துக்களைத் தொகுத்து வழங்கும் சந்தா சேவை.

இன்று செயலி மூலமாக பிளின்கிஸ்ட் செய்கின்ற புத்தகங்களின் சுருக்கத்தைக் கொடுக்கும் முறை நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கிறது. இதில் முன்னோடி ரீடர்ஸ் டைஜஸ்ட் (Reader’s Digest) பத்திரிகை. புகழ்பெற்ற புனைவுகளை, கதைகளை, அதிசயமான உண்மை சம்பங்களை ஓரிரு பக்கங்களில் சிறு கதை வடிவில் கொடுப்பது இவர்களின் சிறப்பு. அடுத்த உதாரணம், 1929இல் இருந்து மெட்ராஸில் இயங்கும் லிப்கோ பதிப்பகம். தமிழ் காப்பியங்களையும், இதிகாசங்களில் வரும் விசயங்களையும், புராணங்களையும் சுருக்கி கையடக்கப் பதிப்புகளாக அறுபதுகளிலேயே பதிப்பித்திருக்கிறார்கள். இதே முறையில் ஆங்கிலத்தில் வந்த பல சுய முன்னேற்றப் புத்தகங்களை பதினாறு பக்க சிறு நூல்களாக வெளியிட்டு வருகிறார்கள். இதே முறையில் கீதா பிரஸ், ராமகிருஷ்ண மடம், பைபிள் பதிப்பகங்கள் அவரவர்களின் தெய்வீக நூல்களைச் சுருக்கி குறைந்த விலையில் பதிப்பிக்கிறார்கள். இவை எல்லாவற்றின் நோக்கமும் பிளின்கிஸ்ட்டின் நோக்கமும் ஒன்றே, எளிய முறையில் வாசகரை அடைய வேண்டும்.

இன்றைய அதி வேக உலகில் புது நூல்களை அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் பிளின்கிஸ்ட் இன்றியமையா செயலி. தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.

#MadrasPaper #Blinkist #AppStories


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “சுருக்கிக் கொடு!”
  1. சுருக்கிக்கொடு பிளின்க்ட் செயலி மற்றும்‌அதன் நிறை‌குறை என அலசி தள்ளிட்டீங்க!!

    முன்பு இருந்ததைப் போல அதிகம் மக்கள் படிப்பதில்லை என்பது குறை தான்…இருந்தாலும்…சுர்ஙகச்சொல்லி விளங்கவை என்பது தாரக மந்திரமாக உள்ளதே !!

    பதினாறு பக்க செய்தித்தாளில் வெறும் தலைப்பை மட்டும் வாசிக்கும்போது உள்ளே உள்ள உள்ளடக்கத்தை படிடா என அப்பா கூறியதும், இப்போது way2news, inshorts போன்றவை தேவை இருக்கிறது…50ஓவர் கிரிக்கெட் மேட்ச் 20 ஓவராக குறைந்துள்ளது. அதேபோல் முழு நீள காணொளிகள் ஷார்ட்ஸ்களாக மாறி உள்ளது.

    இதைப்போல ஒவ்வொருவரும் சுருக்கத்தை எதிர்ப்பார்க்கின்றனர்….நாமே கூட புத்தக பின்னட்டை ஆசிரியரின் முன்னுரை பார்த்து புத்தகங்கள் வாங்கி இருக்கிறோம்..அறிவியல் சில பின்னடைவுகளை தந்தாலும் சில குறைகள் இருந்தாலும் மேலும் மேலும் படிக்க இச்செயலி நன்றாக இருக்குமே!!

    Think positive…

    அருமை வெங்கட் சார்…!!!

    Atleast we “blink it” instead of sleep with blanket!!!

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading