செயலி+கைவினை= செய்வினை?

இன்றைக்கு இன்ஸ்டாகிராமில் உணவுப் படங்கள், பயணப் படங்களுக்கு அடுத்தபடியாகப் பிரபலமாக இருப்பவை கைவினைப் பொருட்களைப் பற்றிய பதிவுகள். இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இதற்காகவே ஒரு செயலியை உருவாக்கினால், அது டெடோ (Tedooo) போலவே இருக்கும்.

மிச்செல் அபெல்கர் (Michelle Apelker) என்கிற இஸ்ரேலியப் பெண்மணிக்கு வித்தியாசமான கைவினைப் பொருட்களைத் தேடி வாங்குவதில் ஆர்வம் அதிகம். இதற்காகவே அவர் பலமுறை சீனா சென்றார். ஆனால் அங்கே பொதுவாக எல்லோரும் போகும் பெரிய சூப்பர் மார்க்கெட்களையும், சுற்றுலாப் பயணிகளுக்கான இடங்களையும் தவிர்த்தார்.

பதிலாக, பொருட்களை உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலை நகரங்களுக்குச் சென்றார். அங்கே இருக்கும் நேரடிச் சந்தைகளை, ஆண்டுதோறும் நடக்கும் பொருட்காட்சிகளைப் பார்வையிட்டார். அப்படி ஒவ்வொரு முறை செல்லும்போதும் மிச்செல் பல ஆயிரம் விற்பனையாளர்களின் விவரங்களை, அவர்களின் விசிட்டிங் கார்டுகளைச் சேகரித்தார். அவற்றிலிருந்து தேவையான ஒன்றைத் தேடுவது சிரமமாக இருக்க, மென்பொருள் பொறியாளரான தனது தம்பி மோர் அபெல்கரின் உதவியை நாடினார். அவரும் அக்காவுக்காக ஒரு செயலியை எழுதிக் கொடுத்தார்.

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “செயலி+கைவினை= செய்வினை?”
  1. டெடோ புதுமையான செயலி மட்டுமல்லாது , புதுமையான யோசனையும் கூட…நமக்காக நாம் செய்யும் சில மெனக்கெடல்கள், எப்போதாவது மாபெரும் வெற்றி அடையும் நம்மை அறியாமலே…அந்த வகையில் இது மிகச்சிறப்பு…

    ஓரளவு இதனைப் பற்றிய அறிவும் சந்தைப்படுத்துதலும் தெரிந்திருந்தால் நமது பொருட்களுக்கு லாபம் ஈட்ட முடியும்…

    வாரம்‌ பல புதுமையான தொழில்நுட்ப விஷயங்கள் கூறுகிறீர்கள் ..மிக்க மகிழ்ச்சி..

    நல்ல தகவல் இந்த வாரம்..பாராட்டுகள்…

    என்றும் அன்புடன்

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading