OpenAI-யின் மாடல் தானாகவே Hugging Face தளத்திலிருந்து திருடியதா? நடந்தது என்ன? எளிய விளக்கம்.

சாட்ஜிபிடியை வெளியிடும் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம், அவர்களது பயிற்சியில் இருக்கும் வெளிவராத புதிய செய்யறிவு மாதிரியைத் தங்களது சோதனைக் கூடத்தினுள் பரிசோதித்துக் கொண்டிருந்தது. இந்த ஏஐ மாதிரிக்குக் கொடுக்கப்பட்ட புதிரானது, இணையப் பாதுகாப்பை உடைத்து, ஒரு ரகசியக் கொடியைக் கண்டுபிடிப்பது.

தனக்குக் கொடுக்கப்பட்ட இந்த வேலையை ஏஐ மாதிரி நேரடியாகச் செய்யாமல், குறுக்கு வழியாக விடைகள் இருக்கும் நிரலர்கள் பயன்படுத்தும் ஹகிங்-பேஸ் (Hugging Face) தளத்திற்குச் சென்றது. அதன் ஓட்டைகளைக் கண்டறிந்து, அதைக் கொண்டு அந்த விடைகளைத் திருடி, தனக்குக் கொடுக்கப்பட்ட குறிக்கோளை அடைந்துள்ளது.

இது ஏதோ செயற்கை நுண்ணறிவே திட்டமிட்டு மனிதர்களுக்கு எதிராகச் செய்த தாக்குதல் அல்ல.

இது செய்யறிவு மாதிரிகளின் வளர்ச்சியில் அடுத்தபடி என்பதை மறுக்க முடியாது. அதே சமயம், ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் பேபில் (Fable) புகழ் அடைந்திருக்கும் சூழலில், இந்த நிகழ்வை ஓபன்ஏஐ நிறுவனம் தங்களது விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், பதில் ‘ஆமாம்’ என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிகழ்வைப் பற்றி ஏன் உலகம் முழுவதும் பேசப்படுகிறது, பொதுமக்கள் இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை எளிய தமிழில் இந்த காணொலியில் விளக்குகிறேன்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading