Vasanta Bhavan business lunch at Velachery Phoenix Mall: too much food for one

போன வெள்ளிக்கிழமை ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு அடுத்த படத்துக்கு முன்னர் மதிய உணவுக்காக வசந்தப் பவன் சென்றிருந்தோம். சிறிய அளவு சாப்பாடு (மினி லஞ்ச்) இருக்கா என்று கேட்டதற்கு, இல்லை, பிசினஸ் லஞ்ச் இருக்கு என்றார்கள்.

ஆர்டர் செய்யும்போதே விலை முந்நூறு ரூபாய்க்கு மேலாக இருக்கிறதே, சோறு நிறைய இருக்குமா என்று கேட்டோம். இல்லை சார், ஒருவர் சாப்பிடும் அளவுதான் என்றார் சிப்பந்தி. நாங்கள் நான்கு பேர் போயிருந்தோம், ஆளுக்கு ஒன்று ஆர்டர் செய்தோம்.

சிறிது நேரத்தில் வந்த தட்டில் இருந்தவை இவை. ஒரு சப்பாத்தி, சிப்ஸ், பொரியல், குருமா, வெங்காயத் தயிர்ப் பச்சடி, சர்க்கரைப் பொங்கல், அதோடு அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லும் அளவிலான டிபன் பாக்ஸ். மூன்று அடுக்கு டிபன் பாக்ஸில், சாம்பார் சாதம், சைவப் பிரியாணி, தயிர் சாதம். எல்லாவற்றையும் பார்த்து மலைத்துவிட்டோம். இருவர் திருப்தியாகச் சாப்பிடும் அளவில் இருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் முடிந்த அளவு சாப்பிட்டு, மீதியை வீணடித்தோம்.

அடுத்து எங்களுக்கு இன்னொரு திரைப்படம் பார்க்க வேண்டி இருந்ததால், வீட்டுக்குப் பார்சல் செய்ய முடியவில்லை. செலவானது பரவாயில்லை, ஆனால் உணவை வீணடித்தது மனசாகவில்லை.

சில துரித உணவகங்களில் நாம் பார்க்கும் வகையில் சாப்பாட்டு வகைகளை அவை வழங்கப்படும் அதே தட்டில் நெகிழி மாதிரிகளாக வைத்திருப்பார்கள். பார்த்தவுடன் அளவைச் சரியாகப் புரிந்துகொள்ளலாம். அப்படி இங்கே வைத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும்.

வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் இருக்கும் வஸந்த பவன் அளிக்கும் பிசினஸ் லஞ்ச் (Business Lunch)
வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் இருக்கும் வஸந்த பவன் அளிக்கும் பிசினஸ் லஞ்ச் (Business Lunch)
too much food for one
too much food for one

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading