Paneer Bhurji with Pav Bun
Paneer Bhurji with Pav Bun

இட்லி, தோசை, முந்தைய இரவு உணவின் மிச்சம் என காலையில் சாப்பிட்டுச் சலித்துவிட்டது. ஒரு மாறுதலுக்காக இன்று காலை உணவிற்காக மயிலாப்பூர் கேளீர் கேண்டீனில் (Kaylir Canteen) இருந்து ஸ்விகி (Swiggy) மூலம் ‘பனீர் புர்ஜி பாவ் பன்’ (Paneer Bhurji with Pav Bun) ஆர்டர் செய்திருந்தேன்.

வடா பாவிற்கு வழங்கப்படும் ரொட்டியுடன் (பன்), பனீரை உதிர்த்து அதில் மிகக் குறைந்தளவு மசாலாக்களைச் சேர்த்துச் செய்யப்பட்டப் பொடியலுடன் சாப்பிட வேண்டும். அதோடு புதினா சட்னியையும், நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துச் சாப்பிடலாம். வித்தியாசமாகவும் ருசியாகவும், காலை உணவிற்கு ஏற்ற அளவில் நன்றாக இருந்தது. அதிகப் பசி இருந்தால், இது மட்டும் போதாது.

பனீர் புர்ஜி பாவ் பன்
பனீர் புர்ஜி பாவ் பன்

அடுத்த முறை தருவித்து உண்டு பார்க்கவும். நன்றி.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading