சென்னையில் சிறந்த மலாய் லஸ்ஸி கிடைக்கும் இடத்தை இதே வலைத்தளத்தில் முன்பு ஒரு முறை எழுதியிருந்தேன்.
சிறந்த மலாய் லஸ்ஸி கிடைக்கும் துரித உணவகத்தின் பெயர் பம்பாய் லஸ்ஸி. இடம் பார்பர் அகான் தெரு, மவுண்ட் ரோடு. தேவி திரையரங்குக்குப் பின்புறம் இருக்கும் சிறிய சந்து. தெருவில் நின்று கொண்டு தான் சாப்பிட வேண்டும். சமீபத்தில் கடையைப் புதுப்பித்து இருக்கிறார்கள், முன்பைவிட நன்றாக இருக்கிறது.
இங்கே போய் ஸ்பெஷல் லஸ்ஸி என்று கேட்டால் நல்ல கெட்டித் தயிரில் சர்க்கரைத் தூவி, மேலே மலாய் ஏடை போட்டுக் கொடுப்பார்கள். நல்ல சுவையாக இருக்கும். மாலை வேளையில் சுடச்சுட ஜிலேபியும் சமோசாவும் கூடக் கிடைக்கும். சுவைத்துப் பாருங்கள்.



பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

