February 2025

காதலிக்க வலதுபுறம் தள்ளவும்

சுயம்வரம், கந்தர்வ விவாஹம், குடும்பத்திற்குள் பெரியோர்கள் முடிவு செய்வது என்று பல வகைத் திருமண ஏற்பாடுகள் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. இன்றைக்குப் பல நாடுகளில் நிலைமை முதலில் காதல், திருமணத்தைப் பின்னர் பார்க்கலாம் என்று மாறத் தொடங்கிவிட்டது. இதற்கு ஒரு படி…

Chennai Trade Fair 2025

சிறிய வயதில் என் தந்தையோடு சென்ற நினைவில், ஆண்டுதோறும் நடக்கும் சென்னை சுற்றுலா பொருட்காட்சி செல்ல எனக்குப் பிடிக்கும். இந்த ஆண்டு பொங்கல் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் இன்றைக்குத் (25 பிப்ரவரி 2025) தான் போக நேரம் கிடைத்தது.…

வந்துவிட்டது அமேசான் கிண்டிலில் “நுட்பம்”

மகிழ்ச்சியான செய்தி. எனது முதல் தமிழ் நூல் “நுட்பம்” இப்போது அமேசான் கிண்டில் தளத்தில் மின்-நூலாகக் கிடைக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும், காகிதப் பதிப்பை விரும்பாதவர்களுக்கும், இது வசதியாக இருக்கும் என நம்புகிறேன். நூலை வாங்கிப் படித்து உங்களின் கருத்துக்களைப் பகிருமாறு விரும்பிக்…

வேகம் ஒன்றே மூலதனம்

வெளிநாட்டில் வசிக்கும் நண்பரும் அவருடைய மனைவியும் அவர்களின் ஒரு வயதுக் குழந்தையும் வீட்டுக்கு வருவதாகத் தொலைப்பேசியில் அழைத்துச் சொன்னார்கள். அருகில் ஒரு வேலையாக வந்திருப்பதாகவும், அடுத்த பதினைந்து நிமிடங்களில் வந்துவிடுவோம் என்றார்கள். தாராளமாக வாருங்கள் என்று அழைத்தாலும், மனத்தில் பதற்றம் வந்தது.…

பேஸ்புக்கில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள் – எச்சரிக்கை!

நான் பேஸ்புக்கில் சேர்ந்த காலத்திலிருந்தே (ஆகஸ்ட் 2007) எந்தக் குழுக்களில் சேர்கிறேன், யாரை நண்பர்களாக ஏற்கிறேன், எந்தப் பதிவுகளை விரும்புகிறேன் என்பதில் கவனமாக இருப்பேன். இதனால், எனது செய்திப் பட்டியலில் குப்பைத் தகவல்கள் அரிதாகவே வரும். சில மாதங்களுக்கு முன்னர் நான்…