சுயம்வரம், கந்தர்வ விவாஹம், குடும்பத்திற்குள் பெரியோர்கள் முடிவு செய்வது என்று பல வகைத் திருமண ஏற்பாடுகள் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. இன்றைக்குப் பல நாடுகளில் நிலைமை முதலில் காதல், திருமணத்தைப் பின்னர் பார்க்கலாம் என்று மாறத் தொடங்கிவிட்டது. இதற்கு ஒரு படி மேலே போய் திருமணங்களின் எண்ணிக்கையே வேகமாகக் குறைந்து வரும் ஜப்பான் நாட்டில் அரசாங்கமே தரகர் சேவையை வழங்கிவருகிறது. இத்தகைய நவீனச் சுழலில் தங்களின் துணைவர்களைத் தேட உதவுவதில் உலகளவில் முன்னணியில் இருப்பது ‘டிண்டர்’ செயலி!
இணையம் தொடங்கிய காலம் தொட்டே காதலும் காமமும் அதில் வரத் தொடங்கிவிட்டது. உதாரணமாக 1993ஆம் ஆண்டில் வந்த மாட்ச் (Match.com) என்கிற தளத்தில் காதலர்களைத் தேடி அவர்களோடு தொடர்பு கொள்ளலாம். இதைப் போலவே அடுத்த இருபது ஆண்டுகளில் பல தளங்கள் வெளிவந்து, ஓரளவு வெற்றியும் பெற்றன. ஆனால் 2012ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நடந்த ஒரு சடுதி மென்பொருள் ஆக்க (hackathon) போட்டியில் உருவாக்கப்பட்ட மேட்ச்பாக்ஸ் செயலி வந்த வேகத்திலேயே முழுச் சந்தையையும் கைப்பற்றியது. அப்போதிருந்த செயலிகளைவிடப் புதியவர்களைச் சந்தித்து, காதல் தொடர்புகளை உருவாக்குவதை எளிதாகச் செய்தது மேட்ச்பாக்ஸ்.
தொடர்ந்து படிக்க இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையைப் பார்க்கவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

