இந்த வாரம் முழுக்க செய்ய நினைத்த வேலைகளை, எழுதத் திட்டமிட்டிருந்த பதிவுகளை எழுத, அல்லது படிக்க நினைத்த பக்கங்களைப் படிக்க முடியவில்லை.

சாமியார் பூனை வளர்த்த கதை போல ஒரு வேலையைச் செய்யத் தொடங்க அதற்கு நடுவில் ஓர் அழைப்பு வர, அதற்குப் பதில் சொல்ல, அல்லது ஒரு வேலையைச் செய்யத் தேவையான விபரங்கள் தயாராக இல்லாமல் இருக்க அதைத் தயார் செய்யப் போக அதற்குத் தேவையான விஷயங்கள் இல்லாமல் இருக்க அதைச் சரிசெய்யப் போக அல்லது ஒரு பதிவைப் படிக்க ஆரம்பிக்க அதிலிருந்து விவரங்கள் கவர, அதை ஆராயப் போக என்று இப்படியே போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப் பொங்கலுக்குள் என் பட்டியலில் இருக்கும் வேலைகளை முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன் – இதில் வேடிக்கை என்னவென்றால் இது எதுவுமே என் அலுவல் அல்லது வரவு தொடர்பானவை இல்லை – எல்லாமே வீட்டு மின்சாரக் கட்டணம், தொலைப்பேசி கட்டணம் கட்டுவது, என் ஆர்வத்திற்குச் செய்பவையும், அல்லது நண்பர்களின் உதவ விவரங்களைக் கொடுப்பவை போன்றவை!

Categorized in:

Tagged in: