இந்தியாவின் சில மாநிலங்களின் நிலப்பரப்பு அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட ஓர் அட்டவணையைக் கூகுள் பார்ட்டை உருவாக்கச் சொன்னேன், அதைப் பார்த்தபோது, ஆச்சரியப்பட்டேன். நான் எதிர்பார்த்தபடி உத்தரப் பிரதேசம் அல்ல, ராஜஸ்தான் தான் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம் என்று அது காட்டியது.

முதலில், நான் இந்தத் தகவலை ராஜஸ்தான் மாநில அரசாங்கத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு நாளிதழ் விளம்பரத்தில் படித்தேன். புதிய மாவட்டங்களை உருவாக்கி, மாநிலத்தில் இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை ஐம்பதாக உயர்த்தி அறிவித்திருந்தனர். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய வழியாக அவர்கள் இதைச் சொல்லி இருந்தனர்.

அட்டவணையைப் பார்த்தபோது, ​​ராஜஸ்தானின் நிலப்பரப்பு 342,239 சதுர கிலோமீட்டர் என்று தெரியவந்தது, இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 10.4% ஆகும். உத்தரப் பிரதேசத்தின் நிலப்பரப்பு 240,928 சதுர கிலோமீட்டர் மட்டுமே, இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 7.3% ஆகும்.

2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ராஜஸ்தான் மாநிலத்தின் மக்கள் தொகை 68,548,437 ஆகும், இது இந்தியாவில் ஏழாவது இடத்தில் (மக்கள் தொகை தரவரிசையில்) உள்ளது. தமிழ் நாடு மக்கள் தொகையில் ஆறாவது இடத்தில் (மக்கள் தொகை 72,147,030) இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பாராளுமன்ற மக்களவைக்கு இருபத்தைந்து உறுப்பினர்கள் செல்கிறார்கள், தமிழ் நாட்டில் இருந்து முப்பத்தொன்பது உறுப்பினர்கள் செல்கிறார்கள்.

நான் இந்தத் தகவலை அறிந்து ஆச்சரியப்பட்டேன், அதை உங்களுடன் பகிர விரும்பினேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் சில மாநிலங்களின் நிலப்பரப்பு அடிப்படையிலான தரவரிசை. Source: Google Bard

இந்தியாவின் சில மாநிலங்களின் நிலப்பரப்பு அடிப்படையிலான தரவரிசை. Source: Google Bard

A table showing a few states of India, based on their geographic area and population. Source: Bing Chat

A table showing a few states of India, based on their geographic area and population. Source: Bing Chat

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய மாநிலங்கள் சிலவற்றைப் பிரித்து புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தராகண்டம் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் உருவாக்கப்பட்டது. புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, மிகப் பெரிய மாநிலம் எதுவாக இருக்கும் என்று பார்த்தால், பதில் அப்போதும் உ.பி. இல்லை, மாறாக மத்தியப் பிரதேசம் தான் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக இருந்தது.

புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு,  மிகப் பெரிய மாநிலம் எது?

புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, மிகப் பெரிய மாநிலம் எது?

Tagged in: