இன்று கூகுள் பார்ட் தளத்தில் ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்தில் கொடுத்து தமிழில், தற்கால வழக்குத் தமிழில், மாற்றவும் என்று சொன்னேன். அதற்குக் கூகுள் விடையளித்ததில் சில ஆங்கில வார்த்தைகள் இருந்தது. அது கூட பரவாயில்லை, ஆனால் அப்படி ஆங்கில வார்த்தைகளைக் கூகுளின் ஈனும் செயற்கை நுண்ணறிவு எழுதியதற்கான காரணம் தான் கவனிக்க வேண்டியது. வலித்தாலும், இது தான் உண்மை – பல இலட்சம் தரவுகளைப் படித்து அதில் தமிழ் எப்படி எழுதப்படுகிறது என்று கணினி கணக்கிட்டுத் தான் “நட்பாக” என்று எழுத இன்று தமிழர்கள் பயன்படுத்துவது “ஃப்ரெண்ட்லியான”, “பகிர” என்றால் “ஷேர்”, “சீற்றமிகு” என்றால் “ஃபியூரியஸ்” என்று சொல்கிறது.

இது தான் தற்காலத் தமிழின் நிலைமை. திருவள்ளுவரும், கம்பரும், பாரதியும் நம்மை மன்னிப்பார்களாக! இதைச் சரி செய்ய வேண்டியது கூகுளோ, மைக்ரோசாப்ட்டோ, ஓபன் ஏ.ஐ.யோ இல்லை. நாம் தமிழைப் புழங்குவதைச் சரி செய்தால் அவர்களின் செயற்கை நுண்ணறிவு மாற்றத்தைப் புரிந்து கொள்ளும். மாற வேண்டியது நாம். தமிழக அரசு மட்டுமே இதைச் செய்ய முடியாது, ஆனால் ஒரு விழிப்புணர்ச்சியைத் தொடங்க வேண்டிய நேரம் இது.

நன்றி. #googlebard #tamiltranslation #tamilusage

கூகுள் பார்ட்

கூகுள் பார்ட்

Categorized in: