ரம்மி, பெயரே வித்தியாசமாக இருந்ததை நம்பி இந்தப் படத்தை இன்று பார்த்தேன். நண்பன் கோகுலின் அழைப்பால் ஒரு முன்று மணி நேரத்தையும் ரூ.100ம் (தேவி திரையரங்கில் இருந்து வீடு திரும்ப மீட்டர் ஆட்டோ கட்டணம்)  தண்டம். கடைசி வரை படத்தின் பெயர் ஏன் ரம்மி என்றே புரியவில்லை!

தமிழ் இயக்குனர்களுக்கு இப்போதெல்லாம் 1980களின் என்ன ஒரு மோகமோ!, ”ரம்மி”யின் கதையும் 80களில் தான் நடக்கிறது. முதல்காட்சியில் 1980 என்று வருகிறது, நாமும் பின்னால் கதை 2014களுக்கு வரும் என்று காத்துக்கொண்டிருப்பது தான் மிச்சம், படம் 1980ஐ விட்டு வரவே இல்லை. இது உண்மை கதையும் இல்லை (அப்படி எதுவும் காட்டவில்லை), அப்படி இருக்க எதற்கு 1980க்கு போனார் இயக்குனர்?

கதையிலும் எதுவும் புதுமையில்லை, காட்சிகளிலும் புதுமையில்லை, வசனத்திலும் இல்லை. சுரி காமெடி என்ற பெயரில் வந்து போகிறார். ஹீரோவாக வரும் இனிகோ பிரபாகரன் (Inigo Prabhakaran) நன்றாக செய்திருக்கிறார்.  இரண்டாம் ஹீரோயினாக வரும் ஐஸ்வர்யா ராஜேஸ் (Aishwarya Rajesh) கடைசிக்காட்சியில் அழுத்தமில்லை என்றாலும் விஜய் சேதுபதியுடன் (Vijay Sethupathi) காதல் காட்சிகளில் பரவாயில்லை. டி.இமான் (D. Imman) இசையில் பாடல்கள் அருமை, கேட்டுக் கொண்டே இருக்கலாம் – கூடமேலே கூடவைச்சு, அடியே என்ன ராகம், மற்றும் எதுக்காக என்னை.

Rummy (2014)

Rummy (2014)

Categorized in:

Tagged in:

, ,