Faith,  தமிழ்

Mysore, Sri Parakala Mutt Swamy vijayam to Chennai

அடுத்த இரண்டு வாரம் ஸ்ரீ பரகால மடம், மைசூர் ஜீயர் ஸ்வாமி சென்னை விஜயம். நேற்றைய தினம், மைலாப்பூர் பலாத்தோப்பு மண்டபத்தில், எங்கள் ஆச்சரியன் அவர்களின் தலைமையில் நடந்த ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருமஞ்சனத்தை (ஆராதனையை) கண்டு, ஸ்வாமியைச் செவிக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றது. அதோடு இருந்து, பிரசாதம் (மதிய உணவு) உண்ணும் பெரும் வாய்த்தது என் புண்ணியம். ஆராதனை செய்யப்படும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரின் சிறிய விக்கிரகம் சாக்ஷாத் ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகரிடம் திருவகீந்திரபுரம் ஒளஷதகிரியில் அவரின் தவத்தில் மகிழ்ந்து அருளியது என நம்பப்படுக்கிறது, இந்த பெருமாளே இன்றுவரை ஸ்ரீ பரகால மடத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் அளிக்கிறார்.

பக்தர்கள் காலை 11மணிக்கு அல்லது மாலை 7மணி அளவில் சென்று, இருந்து சேவிக்கலாம், வரும் (ஜனவரி) 22ஆம் தேதிவரை. தொடர்புக்கு: 044-4767 0493. மைலாப்பூர் பலாத்தோப்பு மண்டபம் திருமயிலை பறக்கும் இரயில் நிலையத்தின் எதிரில் இருக்கும் சந்தில் இருக்கிறது, கார் உள்ளே போவது சிரமம், இருசக்கர வண்டிகளைக் கூட மைலாப்பூர் குளத்தின் அருகே அல்லது இரயில் நிலையத்தின் பார்க்கிங்கில் நிறுத்தி நடந்து (மூன்று/நான்கு நிமிட நடை தான்) செல்வது உகந்தது.

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருமஞ்சனம்
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருமஞ்சனம்

#sriparakalamutt #srilakshmihayagreeva #chennaivisit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.