
Sri Lakshmi Hayagriva Temple, Muthialpet, Puducherry
புதுச்சேரியில் முத்தையால் பேட்டையில் இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருக்கோயில் அந்த மாநில பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் மிகப் பிரசித்தம். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த ஞாயிறு அங்கே போக, தரிசனம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. பொறுமையான அர்ச்சனை செய்ய வேண்டி, சேவித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. 1971யில் இந்த திருக்கோயில் நிறுவும் பணியில் என் தாத்தா ஸ்ரீசடாரி சேவகர், லிப்கோ ஸ்தாபகர் திரு கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்களின் முயற்சியும் இருந்தது எனது பாக்கியம்.
இந்த திருக்கோயிலைப் பற்றி, 2012யில் நடந்த கும்பாபிஷேகப் படங்களுடன் இங்கே எழுதியிருக்கிறேன்.





