தமிழகத்தின் ஒரே ஒரு மாட்டுக்காரன், மக்கள் நாயகன் எங்களின் கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் திரு ராமராஜன் அவர்களின் “சாமானியன்” பட வெளியீட்டை ஆவலாக நான் எதிர்பார்க்கிறேன். உண்மையாக தான் சொல்கிறேன். கேலி செய்யவில்லை. எனக்கு உண்மையிலேயே திரு ராமராஜனின் திரைப்படங்கள் பிடிக்கும். அதுவும் “செண்பகமே செண்பகமே” பாடல் எனது வாழ்நாள் விருப்பம்.

பொறியியல் கல்லூரியின் (1992) ராகிங் போது பொதுவான கேள்வி, உனக்குப் பிடித்த ஹீரோ யார் என்பது. நாம் பதில் சொன்னவுடன் அவரைப் போல நடிக்க, ஓட, ஆட சொல்வார்கள். என் முறை வந்த போது, எனது விருப்பமான கதாநாயகன் என்றதும் யோசிக்காமல் நான் சொன்ன உண்மை “திரு ராமராஜன்”.

கல்லூரி பேருந்தே அமைதியானது!

“சீ போட”, உன்னையெல்லாம் எதுவுமே செய்யச் சொல்ல முடியாது. நல்லகாலம், எங்க ஊரு மாட்டுக்காரன் போல, மாடு இருப்பதாய் கற்பனை செய்து பால்கறக்க சொல்லவில்லை, என் சீனியர்களுக்கு அந்தளவு புத்திசாலித்தனம் இல்லை!

#Ramarajan #samanyan #collegedays

Categorized in:

Tagged in:

,