
Vazhakku Enn 18/9 (2012)
பல மாதங்களாக இந்தப் படத்தைப் பார்க்க எண்ணி நேற்று துபாயிலிருந்து விமானத்தில் வரும் போதுத்தான் பார்க்க முடிந்தது. வழக்கு எண் 18/9, இது சாமுராய் மற்றும் காதல் வெற்றி படங்களை எடுத்த பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் (Balaji Shakthivel)அவர்களின் சமீபத்திய படம்.
நகரங்களின் தெருக்களில் கையேந்தி பவன்களில் வேலை செய்யும் ஒரு பையன் மற்றும் வீட்டில் வேலையாளாக பணி செய்யும் ஒரு இளம்பெண் இவர்களுக்குள் வரும் காதல் பற்றிப் படம். ஆனால் இது சாதாரண காதல் படமில்லை என்பதை இயக்குனர் முதல் காட்சிகளிலேயே நமக்கு காட்டிவிடுகிறார். நகரத்து ஏழைகளின் கஷ்டங்களையும், அதே நகரத்து பதவி/பணம் படைத்தவர்களின் வாழ்க்கையையும் யதார்தமாகவும், அவை ஒன்றோடு உரசும் போதும் அடிபடுவது ஏழைகளுக்கு தான் என்று அழுத்தமாக காட்டியுள்ளார் இயக்குனர். காதல் தோல்விகளால் இன்று அடிக்கடி நடக்கும் கொலை மற்றும் ஆஸிட்விச்சு போன்ற கொடுமைகளை வெளிச்சம் போவது தான் இந்தப் படத்தின் சிறப்பு, அதற்கு இயக்குனரை பாராட்ட வேண்டும்.
படத்தின் கதாநாயகன் ”ஸ்ரீ” (Sri) மற்றும் நாயகி “ஊர்மிளா மகந்தா” (Urmila Mahanta) இருவரும் புதுமுகங்களாம், நம்பவே முடியவில்லை, அவர்களின் நடிப்பில் அவ்வளவு நேர்த்தி. தினேஷாக வரும் மிதுன் முரளியும் (Mithun Murali) பணக்கார திமிரை நன்றாக காட்டியுள்ளார். இவர்களை தாண்டி இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமன், நம் கண்முன்னால் ஒரு நிஜ போலீஸயே கொண்டுவந்து நிறுத்துகிறார், அதுவும் வாஞ்சையாக அவர் ஸ்ரீயிடம் பேசி அவரை மாட்டிவிடுவது அபாரம்.
படம் முடிந்தாலும் பல நாட்களுக்கு நம் நினைவில் காட்சிகளும்/சம்பவங்களும் வரும் என்பதில் சந்தேகமில்லை, கதையில் அவ்வளவு அழுத்தம்/நிஜம்.

விவரமான விமர்சனம் கேபிள் சங்கரிடம் இருந்து இங்கே.

