இன்றைய (27 ஜூலை 2022) மெட்ராஸ் பேப்பர் இதழில் “’ஐயோவென அலறாதீர்கள்! ” என்கிற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்திருக்கிறது. இதற்கு முன் வந்தக் கட்டுரை “பாட்டிகளுக்கு ஜீன்ஸ் மாட்டுங்கள்!”.

நண்பர்கள் கட்டுரையைப் படித்து விட்டு தங்களது கருத்துக்களைப் பகிரவும். நன்றி. முழுக் கட்டுரையும், இதழில் உள்ள மற்ற பல நல்ல கட்டுரைகளையும் படிக்க சந்தா தேவை, தமிழ் பத்திரிகை உலகில் தரமான எழுத்தியல் வளர உங்கள் சந்தாவும், ஆதரவும் பயனாகவிருக்கும்.

முதல் சில பத்திகள் கீழே:

புது போன் வாங்க கடைக்குப் போகிறோம். போன காரியம் முடிந்தது என்று போனை வாங்கிக்கொண்டு அங்கே இங்கே பார்க்காமல் திரும்பி வந்துவிடுவோமா? நமக்குக் கட்டுப்படியாகும் மாடல்களைப் பார்த்து, வாங்குவது ஒரு பக்கம் என்றால் ஓரக் கண்ணால் அங்கே இருக்கும் வெள்ளை மேடையில் பளப்பளக்கும் ஐபோன் வகையறாக்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுவோம். கிட்டே போய் அதைத் தொட்டுப் பார்க்கலாமா, விலை என்னவென்று கேட்கலாமா என்று தோன்றும். தள்ளுபடி இருந்தால் முயற்சி செய்யலாமே என்று தோன்றும். ஆனால் அவன் என்றைக்குத் தள்ளுபடியெல்லாம் தந்திருக்கிறான் என்றும் தோன்றும். பெருமூச்சு விட்டபடி வத்தலோ தொத்தலோ சீன தயாரிப்பில் ஏதோ ஒரு ஆன்ட்ராய்ட் செல்பேசியை வாங்கிக்கொண்டு வீடு வருவோம். அதன்பின் அடுத்த போன் வாங்கக் கடைக்குப் போகும் வரை ஆப்பிளை நினைக்க மாட்டோம்.

சராசரி இந்தியர்கள் அனைவருமே இப்படித்தான். ஆப்பிள் நம் பட்ஜெட்டுக்குள் அடங்காத சரக்கு என்பது பல காலமாக நம் ஜீன்களில் கலந்து கரைந்துவிட்ட ஓர் எண்ணம். உண்மைதானா?

தொடர்ந்துப் படிக்க..

#madraspaper #iPhone

Tagged in:

, ,