Lounge,  தமிழ்

Tamil Nadu Elections 2021 – how you feel determines the votes

தமிழ்நாட்டு தேர்தல் எந்தப் பக்கம் போனாலும் ஏப்ரல் 7யில் இருந்து மே 1 வரை தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளும், சமுக வலைத்தளங்களும் நிச்சயம் அமைதியாக இருக்கும். இந்த அமைதி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய வரம். அதை மக்களான நாம் வீணாக்காமல் இருக்க வேண்டும். கொரொனாவும் ஒதுங்கியிருக்க வேண்டும்.

முன் எப்போதும் இல்லாமல் இந்த முறை, என் நண்பர்கள் வட்டத்தில் யார் எந்தப் பக்கம் என்று, வெளிப்படையாகச் சொல்கிறார்கள். இரண்டு (முன்று) தரப்பிலும் எனக்கு நண்பர்கள் இருப்பது போல் நான் பழகுகிறேன் என நினைக்கிறேன். இப்படி அவர் அவர்களின் சார்பை வெளிப்படையாக சொல்வது, அதற்கு பிரச்சாரம் செய்வது, மாற்றுக் கட்சியினரை வசைப்பாடுவது ஜனநாயகத்திக்கு நல்லதா, தீங்கா, தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம், தேர்தல் என்பது யார் தகுதியானவர்கள் என்று யோசித்து வாக்களிப்பது இல்லை, அது நம் உணர்ச்சிகளைக் கொண்டது என்று எழுத்தாளர் யுவல் நோஹ ஹாரரி சொன்னது நினைவுக்கு வருகிறது.

Referendums and elections are always about human feelings, not about human rationality… For better or worse, elections and referendums are not about what we think. They are about what we feel. And when it comes to feelings, Einstein and Dawkins are no better than anyone else. ~ Yuval Noah Harari in his book “21 Lessons for the 21st century”

#TamilNaduElections2021 #TamilnaduElection2021 #voting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.