சென்னையில் கோடை ஆரம்பமாகிவிட்டது-இங்கே மட்டுமில்லை, தென்னிந்தியாவில் பலயிடங்களில் தண்ணீர் பஞ்சம். சென்னையில் எப்போதும் போல் நிலைமை படுமோசம். சில ஆண்டுகளுக்கு முன் இந்த நகரில் பெருவெள்ளம் வந்தது, அடுத்தாண்டு ஒரு புயல் வந்தது என்றால் நம்ப முடியவில்லை.
நிலத்தடி நீர், பல நூறு அடிகளுக்குக் கீழ் போய்விட்டது. எங்கள் அக்கம்பக்கத்தில் ஆழ்குழாய் கிணறில் நானூறு அடியில் தான் தண்ணீர் கிடைக்கிறது, அதுவும் உப்புத் தண்ணீர். ஆழ்குழாய் கிணறை அமைக்க இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்.
எங்கள் வீட்டில் மாநகராட்சியின் (சென்னை குடிநீர் வாரியம்) குழாய் இணைப்பில் தண்ணீர் நின்று போய் மாதங்கள் நான்காகிவிட்டது. வீட்டிலிருந்த கிணறை நம்பி இருந்தோம். அதிலும் தண்ணீர் குறைந்து, ஜனவரி முதலிலிருந்து தனியாகக் காசுக்கட்டி குடிநீர் வாரிய லாரியில் (சுமையுந்தில்) தண்ணீர் வாங்குகிறோம். 9000 லிட்டர் தண்ணீர் சுமார் ரூ.800. நாங்கள் வெறும் நான்கு பேர் மற்றும் வேலையாட்கள் தான், அதனால் பத்து முதல் பதினைந்து நாட்களுக்கு இந்தத் தண்ணீர் இருக்கும். பொதுவாக இணையம் வழி பதிவு செய்தால் நான்கு அல்லது ஐந்து நாளில் கிடைக்கும், இப்போது பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது, அவ்வளவு தேவை மற்றும் அவர்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை. தனியாரிடம் இருந்து வாங்கினால் 12000 லிட்டர் சுமார் ரூ.2100, ஒன்றிரண்டு நாட்களில் கிடைக்கும், வாரியத்தின் தண்ணீரை விட இது சுமார் தான், ஆனால் பல சமயங்களில் வேறு வழியில்லை. மழை வந்தால் தான் உண்டு. அதுவர இன்னும் சில மாதங்கள் ஆகும்.
எங்கள் வீட்டின் முன்பக்கத்தில் ஒரு 12000 நிலத்தடித் தண்ணீர்த் தொட்டி (Water Sump) இருக்கிறது. சில சமையங்களில் தண்ணீர் பதிவுச் செய்து வர முன்பின் ஆனால் அதுவரை சமாளிக்க இன்னொரு நிலத்தடித் தொட்டி இருந்தால் வசதி என எண்ணி, வீட்டின் பின்பக்கத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன் தேவையில்லை என மணல் கொட்டி, சிமெண்ட் தளம் போட்டு முடியச் சிறிய தொட்டி இருக்கிறது, அதைத் தொண்டி மணலை அள்ளிக்கொட்டிச் சரி செய்யும் வேலையை ஆரம்பித்தேன். அந்த வேலை தொட்டுத்தொட்டு சிலப்பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிறது. சில நாட்களில் முடியும் என நினைக்கிறேன். எவ்வளவு தொட்டி இருந்தாலும் தண்ணீர் லாரியில் வந்தால் தான்!
இந்தச் சிறிய தொட்டியின் கொள்ளளவு (கனவளவு) லிட்டரில் எவ்வளவு எனத் தெரிய வேண்டி, அதன் நீளத்தை, அகலத்தை, மற்றும் ஆழத்தை அளந்தேன். எல்லா அளவுகளையும் சென்டிமீட்டராக மாற்றி (அங்குலத்திலிருந்து), மூன்றையும் பெருக்கி, வந்த எண்ணை 1000த்தால் வகுத்தால், விடைக் கிடைத்தது = 6827 லிட்டர்.
1.நீளம் (Length) = 85 அங்குலம் (Inches) = 215.9 சென்டிமீட்டர் (இதைச் செய்ய அங்குலத்தை 2.54ஆல் பெருக்க வேண்டும், இல்லை கூகிளில் convert 85 inches to cm என்று தேடலாம்)
அகலம் (Width) = 57 அங்குலம் (Inches) = 144.78 சென்டிமீட்டர் (Cms)
ஆழம் (Depth) = 86 அங்குலம் (Inches) = 218.44 சென்டிமீட்டர் (Cms)
2.கொள்ளளவு (கனவளவு) = 215.9 x 144.78 x 218.44 = 6827997.957
3.கொள்ளளவு (கனவளவு) லிட்டரில் = 6827997.957/ 1000 = 6827.99 லிட்டர் (Litre)

Underconstruction Water Sump (as below ground water storage pits are called in India)- நிலத்தடித் தண்ணீர்த் தொட்டி
Comments