
Our humble gift to Sujatha Desikan
இன்றைய காலைப் பொழுது இனிமையாகத் துவங்கியது. என் நண்பர் திரு சுஜாதா தேசிகன் (Desikan Narayanan) அவர்களை பல வருடங்களுக்கு பின் போன வருடம் அக்டோபரில் பார்த்து பேசினேன். இன்றைக்கு அவரை எங்கள் இல்லத்தில் என் மாமியார் திருமதி சாந்தா ராமனுஜன் அவர்களோடு சந்தித்து பேசும் வாய்ப்பு.
பல வைஷ்ணவ திவ்ய தேசங்களுக்கு சென்ற அவரின் பயண அனுபவங்களையும், ஸ்ரீரங்கம் நம்பெருமாளைப் பற்றியும், பலபல விசயங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது. நன்றி.


