இன்று விஜய தசமி அதுவுமாக ஒரு இனிய சந்திப்பு. எழுத்தாளர், ஓவியர், வைஷ்ணவ பாகவதர், என் நண்பர் திரு சுஜாதா தேசிகன் அவர்களைப் பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் பார்த்து பேசும் வாய்ப்பு.
சுடச்சுட காபியோடு நல்ல ஒரு உரையாடல், ஒரு தம்படம் (செல்பி), மற்றும் பல அரிய தகவல்கள்: வைஷ்ணவ முன்று திருமந்திரங்கள் பற்றிய சிறிய உபதேசம், பத்ரிநாத் சென்று வந்த அவரின் பயண அனுபவங்கள் மற்றும் (நீலகண்ட மலை) வெள்ளிமலைப் புகைப்படங்கள், எழுத்தாளர் சுஜாதாவின் ஶ்ரீரங்கம் கதைகள் புத்தகம் உருவான கதை.

பிரியும் முன்பு, நான் கேட்டுக்கொண்டதற்காக என் கையோடு எடுத்துப் போயிருந்த அவரின் ‘என் பெயர் ஆண்டாள்‘ புத்தகத்தில் அவரின் கையெழுத்தும்!!! (இதே பக்கத்தில் மேலே பார்க்கவும்)