இந்த வார துக்ளக் இதழில் வந்துள்ள தலையங்கம் என்னை சிந்திக்க வைத்தது. அது அரசியல் பற்றி அல்ல, கல்வியைப் பற்றி. அந்த ஆசிரியரியின் மீதும், துக்ளக் மீதும் உங்களுக்கு உடன்பாடு இருக்க வேண்டும் என்றில்லை –அரசியல் காரணங்களுக்காக இதை அவர் எழுதியுள்ளார என யோசிப்பதை ஒரு நிமிடம் ஒதுக்கிவிட்டு – இந்த ஒரு கட்டுரையை மட்டும் (பத்திரிக்கையை வாங்கி) முழுமையாகப் படிக்கவும். நான் இங்கே ஒரு பக்கத்தை மட்டும் கொடுத்துள்ளேன்.

காப்புரிமை: துக்ளக் இதழ் (7 மார்ச் 2018). அவர்களுக்கு நன்றி.

காப்புரிமை: துக்ளக் இதழ் (7 மார்ச் 2018). அவர்களுக்கு நன்றி.

அதில் தாய் மொழி (தமிழ்நாட்டில் தமிழ்) கல்வியின் அவசியம் சொல்லப்படுகிறது, தமிழ்நாட்டில் பெரும்பாலனவர்கள் ஆங்கில கல்வியை மட்டுமே நாடுகிறார்கள் – அதனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் முழுவதுமாக தெரியவில்லை, தமிழும் சரியாக தெரியவில்லை, அவர்களின் சிந்தனை திறனும் குறைந்துள்ளது என்பது தான் இன்றைய நிலைமை என்று புள்ளி விவரங்களோடு சொல்கிறது. அதற்கு ஆசிரியர் கழக ஆட்சியும், இந்தி எதிர்ப்பும் தான் காரணங்கள் என்கிறார் – எனக்கு அப்படி தோன்றவில்லை. இதற்கு காரணம், மாறி வரும் சமுதாய மாற்றங்களும், உலகளாவிய சந்தை பொருளாதாரமும், சமுக வலைத்தளங்களும் – முக்கியமாக எந்த கட்சியின் ஆட்சியானலும் அரசு இயந்திரத்தில் வந்துள்ள ஊழல், திறமையின்மையும் தான் என்று தோன்றுகிறது.

நான் ஆங்கில தனியார் பள்ளியில் தான் படித்தேன் – பள்ளியை விட்டு வரும் போது ஆங்கிலம் ஓரளவிற்கும், தமிழ் சுமாராகவும் தான் எனக்கு தெரிந்து இருந்தது. அதன் பின் என் தனிப்பட்ட வாசிப்பில் இரண்டையும் மேலும் கற்றுக் கொண்டேன் – இப்போதும் தமிழில் எழுத்துப் பிழைகள் வரத்தான் செய்கிறது, அது தனி கதை.

எனக்கு இப்போது – தமிழில் சரித்திரத்தைப் படிக்கும் போது, ஆங்கிலத்தை விட எளிதாக அது மனதில் நிற்கிறது. கதைகளும், நாவல்களும் அப்படி தான். முன்பு அப்படியில்லை, நான் தமிழில் படித்தது குறைவு. அறிவியலும், கணினி துறை விசயங்கள் அங்கிலத்தில் தான் புரிகிறது – அது என் தப்பாக இருக்கலாம், நான் அதற்கான முயற்சிகள் இன்னும் எடுக்கவில்லை.

எது காரணமோ, அதை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடிக்கட்டும், இப்போது நாம் செய்ய வேண்டியது, மத்திய மாநில அரசுகளை (கட்சி கொள்கைகளை கடந்து – அது கஷ்டம் தான்) இந்த விசயத்தை சிந்திக்க வைப்பது தான். இது நம் பேர பிள்ளைகளின் (பிள்ளைகள் கதி ரொம்பவே சிக்கல் தான்) நலனிற்காக!

Footnote:

See this article published in Education Review, Australia by Naomi Fillmore that says “Mother tongue-based multilingual education (MTB MLE) uses the learner’s first language to teach literacy and basic academic content. The second language is taught systematically and gradually so that students are able to transfer what they have learnt from their first language to their second.

Categorized in:

Tagged in:

,