Andhikkadai Restaurant, Velachery

நேற்று, சேப்பியன் ஜீனோவும் (Sapien Geno) அண்ணா நூற்றாண்டு நூலகமும் சேர்ந்து நடத்திய நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதிய உணவிற்காக வேளச்சேரி சென்றோம். நாங்கள் போனது ஞாயிறு மதியம் இரண்டு மணி.

முதலில் போனது வி.பி. வேர்ல்டுக்கு (VB World). அங்கே ஒரு தனியார் திருமண நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது, அதனால் மற்றவர்க்கு அனுமதியில்லை. அடுத்து வேளச்சேரி குப்தா பவன் (Sree Gupta Bhavan), கீதம், ஃபீனிக்ஸ் மால் (Phoenix Mall) என எங்கேயுமே கார் நிறுத்த இடமில்லை. ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் இவ்வளவு கூட்டத்தை நான் பார்த்ததில்லை.

சரி என்று வேளச்சேரி தண்டீசுவரம் முக்கியச் சாலையில் இருக்கும் அந்திக்கடைக்குச் சென்றோம். இந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான உணவகம் இது என்று கேள்விப்பட்டுள்ளேன். நம்முடைய காரை நிறுத்துவதில் உதவ ஓட்டுநர் (Valet Parking) இருக்கின்றனர். அதனால் சிரமமில்லை.

சிறிய இடம்தான். குறைவான உணவு வகைகளே இருந்தன. நான் ஒரு முழுச் சாப்பாடு வாங்கிக்கொண்டேன். அதில் வந்த வகைகள்: சாதம், அப்பளம், உருளைக்கிழங்குப் பொரியல், பூசணிக்காய்க் கூட்டு, பாயசம், புளிக்குழம்பு, பூண்டு இரசம், மோர்க்குழம்பு மற்றும் மோர். நாம் கேட்கும் அளவு சாதமும் மற்றவையும் கொடுக்கின்றனர்.

Full meals Unlimited at Andhikkadai, Velachery, Chennai
Full meals Unlimited at Andhikkadai, Velachery, Chennai
Entrance of Andhikkadai, Velachery, Chennai
Entrance of Andhikkadai, Velachery, Chennai
Interior at the Andhikkadai Restaurant, Velachery
Interior at the Andhikkadai Restaurant, Velachery
அந்திக்கடை, தண்டீசுவரம் முக்கியச் சாலை, வேளச்சேரி
அந்திக்கடை, தண்டீசுவரம் முக்கியச் சாலை, வேளச்சேரி

எனக்கிருந்த பசிக்கு எப்படி இருந்தாலும் சாப்பிட்டிருப்பேன். அப்படி இருந்தாலும், சுவையில் குறைசொல்ல எதுவுமில்லை, அதேபோலப் பாராட்டவும் சிறப்பாக எதுவுமில்லை. ஒரு முழுச் சாப்பாட்டின் விலை ₹138.10, வரியைச் சேர்த்து ₹145.

சாப்பாட்டுக்குப் பிறகு தெரியாமல் ஒரு நன்னாரி சர்பத் (ரூபாய் 47.62) வாங்கிவிட்டேன். அது வெறும் சர்க்கரைத் தண்ணீர், இனிப்புப் பிடித்த எனக்கே முழுவதையும் குடிக்க முடியவில்லை.

இந்தப் பகுதிக்குச் சென்றால் சாப்பிட்டுப் பார்க்கலாம், மற்றபடி இதற்காக அங்கே செல்ல வேண்டியதில்லை என்றே தோன்றியது. நன்றி.

Bill at Andhikkadai
Bill at Andhikkadai

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “Andhikkadai Restaurant, Velachery”
  1. இந்தப் பதிவிற்கு பேஸ்புக்கில் நண்பர் ஷான் எழுதிய கருத்து:
    நாம் போன நேரம் அப்படி. குறைவான ஐட்டங்களே இருந்தன.

    நான்:
    அப்படியா. பசிக்கு உணவிட்டவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டேனே, பாவம்.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading