சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் மாலில் இருக்கும் இரண்டு கடைகளுக்கு போக வேண்டி இருந்தது. போன வேலையை முடித்த போது மதியம் 12:30 மணி ஆகியிருந்தது. லேசாக பசி எடுக்கத் தொடங்கி இருந்தது. இன்னொரு காபி குடிக்க வேண்டாம் என எண்ணி இரண்டாவது தளத்தில் இருக்கும் தியோப்பரோமா (Theobroma) அடுமனை கடைக்கு சென்றேன்.

அவர்களின் சிறப்பு தயாரிப்பான சிகப்பு வெல்வேட் கேக் ஒன்றை வாங்கினேன். கேக்கைவிட அதன் மேலாக இருக்கும் அந்த வெண்ணெய் கிரீமை வாயில் வைத்தால் அப்படியே கரையும் சுவை உங்களை கவர்ந்துவிடும்.

அடுத்த முறை நகரில் பல இடங்களில் இருக்கும் அவர்களின் ஏதாவது ஒரு கடையை கடந்து போனால் கண்டிப்பாகச் சுவைத்துப் பார்க்கவும்.

இதனால் உங்கள் ரத்தத்தில் கூடும் சர்க்கரைக்கோ, உடல் எடைக்கோ நான் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டேன் என்பதை கனிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Red Velvet Cake from Theobroma
Red Velvet Cake from Theobroma
Theobroma, Express Mall, Chennai
Theobroma, Express Mall, Chennai

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading