இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திரு. ரிஷி சுனக்*, மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆந்த்ரோபிக் (Anthropic) ஆகிய இரு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆலோசகராக (adviser) இணைந்துள்ளார். புத்திசாலித்தனமான தேர்வு இது.
இனிவரும் நாட்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான முயற்சிகளுக்குத் தொழில்நுட்பத் தடைகளைவிட, அரசியல் தடைகளே அதிகமாக இருக்கும். ஆய்வுக் கூடங்களைத் தாண்டி, உலகம் முழுவதும் உள்ள பாராளுமன்றங்களிலும் மற்றும் அதிகார மையங்களிலும் தான் இவற்றுக்கான தடைகளும் விவாதங்களும் நடக்கும்.
இவற்றைத் திறமையாகக் கையாள, ஓர் முன்னாள் பிரதமரின் அரசியல் அனுபவம் மிகவும் உதவியாக இருக்கும்.
திரு. சுனக்கிற்கு நல்வாழ்த்துக்கள்!
இதற்கு முன்னரும் பிரிட்டன் அரசியல் தலைவர்கள் பதவியிலிருந்து இறங்கியவுடன் பெருநிறுவனங்களுக்கு வேலைச் செய்துள்ளார்கள். சார் நிக் கிளேக் (Sir Nick Clegg), பிரிட்டன் துணைப் பிரதமராக ஐந்து ஆண்டுகள் இருந்தவர், பிறகு கடந்த ஏழு ஆண்டுகளாக பேஸ்புக் (மெட்டா) நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார்.
*குறிப்பு: நம்மூரில் திரு ரிஷி அவர்களை இன்போசிஸ் திரு நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை என்றால் எளிதில் தெரியும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

